Header Ads



ஜனாதிபதியை கொலை செய்தால், நேரடித் தாக்கம் பிரதமருக்கே இருக்கிறது

நாலக டி சில்வா மற்றும் பொலிஸ் மா அதிபர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதற்காக பிரதான சாட்சிகள் 05 இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார். 

பக்கச்சார்பு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், முறையற்ற நடத்தை உள்ளிட்டவை அந்த சாட்சிகள் என்று அவர் கூறியுள்ளார். 

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 

பொலிஸ் மா அதிபர் பதவி விலகாவிட்டால் அவரை பாராளுமன்ற தீர்மானத்தின் மூலமாக மாத்திரமே பதவி நீக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதன்காரணமாக அதற்கு பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்காவிட்டால் ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டத்தில் அந்தக் கட்சிக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார். 

அதேநேரம் ஜனாதிபதி உயிரிழந்தால் அதன் நேரடி தாக்கம் பிரதமருக்கே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

2 comments:

  1. பேச்சில் உயர்நீதியரசர் தான். நடத்தையில் நம்பிக் கொடுத்த அவுஸ்ரேலியரின் மூலதனம் 4 கோடிக்கு மேற்பட்ட தொகையை போலி ஆவணம் செய்து களவாடி நிரூபிக்கப்பட்டபின் இப் போது நீதிமன்றத்தில் வழக்கு. அந்த அப்பாவி அவுஸ்ரேலிய குடிமகன் வழக்கு வழக்கு என இலங்கை விஜயமும் நீதிமன்றத்துக்கு ஏறுவதும் தான். உண்மையான நீதி நிலைநாட்டப்பட எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.