மகிந்தவின் விம்பமாக, மைத்திரி மாறிவருகிறார் - பேராசிரியர் சரத்விஜேசூரிய கடும் தாக்குதல்
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என்று, பேராசிரியர் சரத் விஜேசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் இணை அமைப்பாளரான பேராசிரியர் சரத் விஜேசூரிய கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில்,
“சிறிலங்கா அதிபருக்கு தெரியாமல் அட்மிரல் விஜேகுணரத்னவினால் நாட்டை விட்டு வெளியேறியிருக்க முடியாது. ஏனென்றால் அவர் தான் பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.
மகிந்த ராஜபக்சவை மாற்றிய மைத்திரிபால சிறிசேன, இப்போது அவரது பிரதி விம்பமாக மாறி வருகிறார் என்பதை இது மேலும் தெளிவுபடுத்துவதாக இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
What Prof Wijesooriya said is 100% correct. Maithiripala should not try to protect criminals and act according to the jurisdiction. If he act like this, Jahapalanaya will become a joke.
ReplyDeleteTrue...
ReplyDelete