Header Ads



அஜித் ரோஹனயின் முக்கிய அறிவிப்பு (வாசிக்கத் தவறாதீர்கள்)

போக்குவரத்து பொலிஸார் மூலம் எமது  வாகனங்கள் நிறுத்த படும்போது எமக்கு ஏற்படும் அசெளகரியங்கள், லஞ்சம், ஊழல் போன்றவற்றை தவிர்க்க  எமக்கு இருக்கும் ஒரு முக்கிய உரிமை பற்றி Traffic Police DIG அஜித் ரோஹன அவர்கள் நேற்று செவ்வாய் கிழமை (11/09/2018)  குறிப்பிடும் போது 

“போக்குவரத்து பொலிஸாரினால் உங்கள் வாகனங்கள் நிறுத்த படும் போது ஏற்பட சாத்தியமுள்ள அசெளகரியங்கள், லஞ்சம், ஊழல் போன்றவற்றை தவிர்க்க நீங்கள் அவர்களுடனான உரையாடலை வீடியோ அல்லது ஓடியோ செய்து கொள்ளுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு இருக்கின்றது. பின்பு தேவைப்பிடின் குறித்த வீடியோ அல்லது ஓடியோவை dig.traffic@police.lk என்ற எமது மின் அஞ்சல் இற்கு  அனுப்பி வையுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம்”  என்றார்.          
டெய்லி மிரர் - 11/09/2018 ) 

அஜித் ரோஹன அவர்கள் வேண்டிக் கொண்ட விடையத்தின் 57 செக்கன் கொண்ட காணொளி ஒன்று கீழே இணக்க பட்டுள்ளது. 


காண, பிறருக்கு அனுப்ப தவறாதீர்கள் . 
  
Video அல்லது Recording செய்வதற்கான உரிமை உங்களுக்கு இல்லை என போக்குவரத்து பொலிஸார் யாரேனும் உங்களுடன் வாக்குவாதப் படலாம். ஆகவே இங்கு இணைக்க பட்டுள்ள ( DIG அஜித் ரோஹன அவர்கள் கதைத்திருக்கும்) YouTube Link ஐ உங்கள் கைத் தொலைபேசியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். அவர்கள் வாக்கு வாதப்படின் கான்பிப்பதற்கு உதவியாக அமையலாம் இன்ஷா அள்ளாஹ்.

எமக்கான போக்குவரத்து உரிமைகள் அதிகரிக்க  பட்டிருக்கும் அதே வேலை நாம் பின்பற்றி ஆக வேண்டிய  போக்குவரத்து ஒழுங்குகளையும் கடமைகளையும்  துஷ்பிரயோகம் செய்யாது போக்குவரத்து பொலிஸாருக்கு  பூரண ஒத்துழைப்பை  வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம். 

(ஷfபீக் zஸுபைர்) 

1 comment:

  1. நல்ல கதையாக இருக்கு எங்கள மறிச்வுடன் முதல் வேலையே பொக்கட்டுல்ல போன வாங்கி பார்த்துவிட்டு தருவது தானே அவங்கட வேலை..

    ReplyDelete

Powered by Blogger.