Header Ads



ஹரீஸின் எண்ணக்கருவில் உதயமாகிறது 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்'


கிராம மட்டத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்' எனும் அமைப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (13) வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் எண்ணக்கருவில் இவ் 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்' உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் இளைஞர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டலையும் தேவையான விளையாட்டு உபகரணங்களையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள 'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்' வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக அவுஸ்திரேலியா நாட்டின் கஸ்சல்லோ குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் கஸ்சல்லோ மார்சல்லோ, தென் கொரியா நாட்டின் என்.வீ.ஜி குறூப் நிறுவனத்தின் பணிப்பாளர் லிம் டொங் பியோ, பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும்   அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள், விளையாட்டுத்துறை விற்பன்னர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.