Header Ads



கள்ளச்சாராய உற்பத்திக்கு எதிராக, செயற்பட்ட இளைஞன் அடித்துக்கொலை - தோட்ட மக்கள் பதற்றம்

-Vi-

இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் உற்­பத்தி செய்யும் இடம் தொடர்­பிலும், அதனால் ஏற்­படும் இடை­யூ­றுகள் குறித்தும் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­து­விட்டு திரும்­பிக்­கொண்­டி­ருந்த தமிழ் இளைஞன் குழு­வொன்­றினால் அடித்துக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இரத்­தி­ன­புரி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொலு­வா­வில பகு­தியில் பார்ம் தோட்­டத்தில் இந்த சம்­பவம் நேற்று மாலை 6.40 மணி­ய­ளவில்  இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்  அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 சம்­ப­வத்தில் குறித்த பகு­தியைச் சேர்ந்த  தனபால் விஜே­ரத்தினம் எனும் தமிழ் இளைஞனே கொல்­லப்பட்­டுள்­ள­தா­கவும் அவ­ரது சடலம் இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்பட்­டுள்ள நிலையில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி மேலும் கூறினார்.

 இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,

இரத்­தி­ன­புரி, கொலு­வா­வில பார்ம் தோட்டம் பகு­தியில் உள்ள  கள்ளச் சாராயம்  உற்­பத்தி செய்யும் இடம் கார­ண­மாக பிர­தே­சத்தில் வாழும் மக்­க­ளுக்கு பல்­வேறு இடை­யூ­றுகள்  தொடர்ந்து ஏற்­பட்­டுள்­ளன. 

இந் நிலையில் நேற்று குறித்த தமிழ் இளைஞன் அந்த கள்­ளச்­சா­ரயம் உற்­பத்­திக்கு எதி­ரா­கவும் அதனால் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ரா­கவும் நேற்று இரத்­தி­ன­புரி பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டுள்ளார்.

 அவ்­வாறு முறைப்­பாடு பதிவு செய்­துள்ள இளைஞன் , அதன் பின்னர் வீடு திரும்பும் போதே பெரும்­பா­ன்மை இனத்­த­வர்­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்­றினால் கடு­மை­யாக தாக்­கப்­பட்டு கொலைச் செய்­யப்­பட்­டுள்ளார்.

 கள்ளச் சாரா­யத்­துக்கு எதி­ராக குறித்த இளைஞன் செய்த முறைப்­பாடு மற்றும் முன் விரோதம்  கொலைக்­கான கார­ண­மாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.  

இந்நிலையில் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த  இரத்­தி­ன­புரி பொலிஸார் சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்­டுள்­ளனர். எனினும் பிர­தான சந்­தேக நபர் உள்­ளிட்ட பலர் தலை­ம­றை­வாகியுள்ள நிலையில் நேற்று இரவு முதல் இரத்­தி­ன­புரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்­ம­சிறி முன­சிங்­கவின் உத்­தரவின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.டி.ஏ. சேர­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

 இத­னி­டையே இந்த சம்­பவம் பதி­வா­ன­தை­ய­டுத்து, உட­ன­டி­யாக இரத்­தி­ன­புரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்­ம­சிறி முன­சிங்­கவை தொடர்­பு­கொண்­டுள்ள, தேசிய நல்­லி­ணக்கம் மற்றும்  அரச கரும மொழிகள் தொடர்­பி­லான அமைச்சர் மனோ கணேசன், சந்தேக நபர்களை உடன் கைதுசெய்து பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்யுமாறு  ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதன்போது உடன் சந்தேக நபர்களை கைது செய்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்மசிறி அமைச்சர் மனோவிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுடனும் தொடர்பு கொண்டு அமைச்சர் மனோ கணேசன் நிலைமையை விளக்கியுள்ளார்.

இதனால் சம்பவம் குறித்து கொலுவாவில பாம்காடன் தோட்ட மக்கள் பதற்றமடைந்துள்ளதால் அப்பகுதியில் தற்போது பொலிஸ் பாதுப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.