பூஜித்தவினால் புதிய சிக்கல், யானைகளும் போர்க்கொடி, மைத்திரி - ரணிலும் முரண்பாடு
ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் விவகாரத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கும் எனவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், ஐக்கிய நாடுகளின் 73ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பியதும் பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment