Header Ads



மக்கள் மனங்களில், வாழும் அஷ்ரஃப்

இந்த பிரபஞ்சத்தில் பல உயிர்கள் தோன்றி மறைகின்றேன. ஆனாலும், மக்கள் மனங்களில் மறைந்தாலும் நினைவுகளாக வாழ்பவர்கள் ஒரு சிலர்கள் தான். அந்த வரிசையில் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களும் ஒருவர். இவர் மரணித்து 18 வருடங்கள் பூர்த்தியானாலும் மக்கள் மனங்களில் இன்றும் நினைவின் இமயமாக வீற்றிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

1948ல் சம்பாந்துறை மண்ணில் ஹுஸைன் விதானையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இந்த பிறப்பு தான் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைச்சுடர் என அன்று பலரும் உணர்திருக்கமாட்டார்கள். இன்று அதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.

இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்த போதிலும், முஸ்லிம் சமூகம் தமிழ் பேசும் சமூகமாக தமிழர்களுடன் சேர்த்து பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் தனித்துவமான இனமென தேசியத்திலும், சர்வதேசத்திலும் அடையாளப்படுத்திய கட்சியாக இன்று வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.

அஷ்ரஃப் என்ற நபர் தனிப்பெரும் ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவராகக் காணப்பட்டார். சட்டத்துறையில் சட்டத்தரணியாக, சட்டமுதுமாணியாக, ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் திகழ்ந்தார். அது மாத்திரமின்றி, சமூக அக்கறை கொண்ட மனிதராக, கவிஞராக, மும்மொழி தேர்ச்சி கொண்டவராகவும் திகழ்ந்தார்.

அன்றைய சூழ்நிலையில் இஸ்லாமியப் பாசறையில் பயிற்றுவிக்கப்பட்ட அஷ்ர ஃப், சமூகத்தின் அவலநிலை கண்டு இவற்றுக்கான தீர்வுகளை அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த முயற்சிகளை இன்று முஸ்லிம் சமூகத்தை பல கூறுகளாக அமைச்சுப் பதவிகளுக்காகஅதிகார ஆசையிலும் பேரினவாதிகளின் விருப்பத்திற்கேற்ப பிரிந்து சென்றவர்கள் செய்கின்ற முயற்சி போன்றதல்ல.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி அதன் பின் அரசியலில் ஈடுபட்டவரல்ல. அஷ்ரஃப், அரசியல் ரீதியாக இந்தச்சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அன்று பலருடனும் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற கட்சியை 1977ம் ஆண்டு உருவாக்கினார். பின்னர் அதிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டார். தமிழ் தலைவர்களுடனும் நல்லுறவைத் தொடர்ந்தார்.

இவ்வாறான அரசியலை மெற்கொண்ட போதும் அவைகள் வெற்றியளிக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தை தமிழ் பேசும் சமூகமாகவே பார்க்கப்பட்டது. இது தான் முஸ்லிம் சமூகம் தனித்துவமானத ஒரு சமூகமென்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு கட்சியின் அவசியம் உணரப்பட்டது 1980ம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தைப் பொறுப்பேற்று அஷ்ரஃப் 1986ம் ஆண்டு அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரகடனப்படுத்தினார்.

இவ்வாறு கட்சி உருவாக்கும் போது அவர் பேரினவாதிகளின் ஏஜன்டாகவோ, அமைச்சராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ, பெரும் செல்வந்தனாகவோ இன்று கட்சி உருவாக்கியவர்கள் போன்று இருக்கவில்லை.

மாறாக, சமூக விடுதலைப் போராளியாகவே தனது பயணத்தை முன்னெடுத்தார். அதில் பல சவால்களை எதிர் நோக்கினார். ஆனாலும், சமூக விடுதலை எனும் வேட்கை அவரை தூங்கவிடவில்லை. அவருடன் இணைந்து சமூக விடுதலைக்காக தங்களின் உயிரையும் கொடுக்கப் போராளிகள் முன்வந்தார்கள்.

இவ்வாறான சமூக உணர்வுள்ளவர்களின் வருகை, அவர்கள் செய்த உயிர்த்தியாகம், கட்சி வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஊராக பரதேசிகளைப்போல் அழைந்து தான் இந்த கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் மேற்கொண்ட தியாகங்கள் தான் இன்று வரை மக்கள் மனங்களில் இந்த கட்சி வேரூன்றிக் காணப்படுகிறது.

இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் இந்த கட்சியை வளர்த்து அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்ற போதும், பல சவால்களைச் சந்தித்தார். கூடவே இருந்தவர்களின் துரோகங்களையும் சந்தித்தார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமூக விடுதலைக்குரலை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் அன்றைய உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உயிரைத்துச்சமென மதித்து ஓங்கி ஒலித்தார்.

அதன் விளைவுகளால் பல எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார். இந்த சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் தன் இன்னுயிரையும் துறந்தார். அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக!

எம்.என்.எம்.யஸீர் அறபாத்

2 comments:

  1. சில நாட்களாக மர்ஹூம் அஷ்ரப்பின் படமும் செய்திகளும் ஊடகங்களில் தலைகாட்டுறதை பார்த்தால் கூடிய விரைவில் நம் அரசியல் வியாபாரிகள் தேர்தல் ஒன்றுக்கு தயாராகின்றார்களோ?

    ReplyDelete
  2. He is not great leader.Great leaders have vision to see the future and the consequences of action taken.He paved the way to emerge anti Muslim parties such BBS,Hela Urumaya Ravana balaya and now Sinhale. He took Muslim UNP votes as a Muslim congress and turn it into SLFP.Because of that anti Muslim SLFP resusitated.

    Let a alone great leaders but even simple man know that SLFP is formed on the basis of anti minority policy and whenever it is in power Muslims are under attack.It is during his time and Under Chandrika Mavenella incident happened.When Rajapaksha came to power in 2006 too Muslims in Beruwala came under attack and their business place are destroyed but as there are no social media and Muslim website this incident was kept secret as Sinhala media not reported it.

    Because of Muslim congress we gain nothing but destruction.He understood his mistake but after damage is done. After he understood the consequences of communal politics he change the Muslim congress name into painting it to secular party.

    We could have called him great leader if he acted Neutrally without supporting any party as did Tamil parties. but he gone after ministry post and other perks. Now we are loosing one by one. What we gained through communal politics except destruction?

    ReplyDelete

Powered by Blogger.