வெட்கமடைந்த மகிந்த, பேரணியின் இடைநடுவிலிருந்து சென்றுவிட்டார் - அஜித் பெரேரா
"அரசாங்கத்தை கவிழ்ப்பதாக கூறி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி எவ்வித திட்டமிடலும் நோக்கமும் கொண்டிருக்கவில்லை. இதனால் அந்த ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியடைந்து விட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தின் இடை நடுவே மஹிந்த வெட்டகமடைந்து பேரணியில் இருந்து சென்று விட்டார்" என இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்து அஜித் பி பெரேரா,
"கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மஹிந்த தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டது. அங்கிருந்த ஏனைய அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கவில்லை. குறிப்பாக ஊடகங்களின் முன்பாக மஹிந்த ராஜபக்ஷவை தவிர ஏனைய அரசியல்வாதிகளே உரையாற்றினார்கள்.
இதை கண்ட மஹிந்த ராஜபக்ஷ கோபமடைந்து வெட்கத்தினால் ஆர்ப்பாட்டத்தின் இடையே அங்கிருந்து சென்றுள்ளார்.
அரசாங்கத்தை பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்த எதிர்ப்பு பேரணியை செய்தார்கள். ஆனால் கொழும்பு வாழ் அப்பாவி மக்களே பாதிக்கப்பட்டனர்.
அரசாங்கத்தின் சில வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிருப்பத்தியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் பொதுமக்கள் கூட்டு எதிரணியின் இந்த எதிர்ப்பு பேரணியில் இணைந்து எமக்கு எதிராக கோஷமிடுவார்கள் என அஞ்சினோம். ஆனால் தலைகீழாகவே நடந்துள்ளனது.
பொதுஜன பெரமுன வெட்கமடையும் அளவிற்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதிவாகியுள்ளது. மதுபானத்தை குடித்துவிட்டு வீதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடந்தார்கள். மதுவுக்காக வந்தவர்கள் மாத்திரமே இந்த பேரணியில் பங்கேற்றார்கள். ஆனால் பொதுமக்களின் ஆதரவு கிடைக்கவில்லை" என்றார்.
அப்படி என்றால் யாராவது மது வாங்கி கொடுத்தால் குடித்து விட்டு கூத்தாடும் நிலையில்தான் மக்களின் பஞ்சம் இருக்கிறது இந்த நல்லாட்சியில்
ReplyDeleteஅரசாங்க அணியினர்களுக்கு அறிவு மட்டுந்தான் இல்லை என்றிருந்தோம் இப்பொழுதுதான் அவர்களுக்கு கண்ணும் இல்லை என்பது புலனாகிறது
ReplyDelete