Header Ads



இலங்கை நுகர்வோர் முகங்​கொடுக்கும் பிரச்சினைகள், ஜெனீவா ஐ.நா. வில் முறையிடப்படுகிறது

இலங்கை நுகர்வோர் முகங்​கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து, நாளைய தினம் நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது அமர்வில் முன்வைக்கப்படவுள்ளதாக, நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகளை முன்வைப்பதற்காக, தமது சங்கத்தின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர்  விரிவுரையாளர் பிரதீபா மஹானாம ஹேவா சுவிட்ஸலாந்துக்கு சென்றிருப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையின் முந்தைய அமர்வுகளின் போது, பல்வேறு காரணங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும்,எமது நாட்டிலுள்ள நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதுவரை எவரும் குரல் எழுப்பவில்லையெனவும்  ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெளிவுப்படுத்தியும் இதுவரை குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனத் ​தெரிவித்த அவர், இதனால் தான் இலங்கை நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, நாளை நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் பல காரணங்களை முன்வைக்க தமது சங்கத்தின் சட்ட ஆலோசகர் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.