Header Ads



சவூதிக்கு பறந்தார் இம்ரான்கான், உம்றாவும் நிறைவேற்றுவார் - அர­ச­மா­ளி­கையில் விருந்துபசாரம்


சவூதி அரே­பிய மன்னர் சல்மான் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்­மான் ஆகி­யோரின் அழைப்­பின்­பேரில் பாகிஸ்தான் பிர­தமர் இம்­ரான்கான் சவூதி அரே­பி­யா­வுக்­கான இரண்­டுநாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஆரம்­பித்தார்.

இதன்போது அவர் உம்றாவையும் நிறைவேற்றவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றதன் பின்னர் இம்ரான் கான் மேற்­கொள்ளும் முத­லா­வது வெளி­நாட்டு விஜயம் இது­வாகும்.

சவூ­தியில்தங்­கி­யி­ருக்­கும்­போது மன்னர் மற்றும் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் ஆகி­யோரை சந்­தித்து இரு­த­ரப்பு உற­வுகள் தொடர்பில் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டுவார். அர­ச­மா­ளி­கையில் இம்ரான் கானுக்கு மன்னர் விருந்துபசாரம் வழங்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.