Header Ads



"இலங்கை வீரர்களுக்கு இடையில் முரண்பாடு அல்லது பிளவு ஏற்பட்டுள்ளது"

அர்ஜூன ரணதுங்கவை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிப்பதே, இலங்கை கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்கான ஒரே வழியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இருக்கும் வரையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரினால், கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாது.

அர்ஜூனவை விளையாட்டுத்துறை அமைச்சராகவோ அல்லது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகவோ நியமிக்க வேண்டும்.

சில வீரர்கள் மூன்று நான்கு முகநூல் கணக்குகளை வைத்துக் கொண்டு சேறு பூசி வருகின்றனர்.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை தெரிவுக்குழுவிடம் ஒப்படைப்பதில் எனக்கு பிரச்சினையில்லை.

வாக்கெடுப்பின் மூலம் சரியானவர்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை அல்லது பிளவு ஏற்பட்டுள்ளது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய காரணத்திற்காக அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்த வேண்டியதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. திறமையான தமிழ் மற்றும் முஸ்லிம் வீரர்கள் நிறையப்பேர் உள்ளனர் அவர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பது காலத்தின் கட்டாயம் . சிங்கள இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளைக் கொடுத்து மற்ற இனமக்களின் சாபத்தை பெறுவதனாலும் இப்படியான தொடரதோல்விகளை சந்திக்க நேரிடலாம்

    ReplyDelete

Powered by Blogger.