கட்டாரில் புதிய சட்டம் நிறைவேற்றம் - இலங்கையர்களும் பயனடையலாம்...!
கட்டார் நாட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் போது தாங்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதியை பெற தேவையில்லை என்ற சட்ட திருத்தத்தை கட்டார் நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
அரேபிய வளைகுடா நாடான கட்டாரில் இலங்கையர், இந்தியர்கள் உட்பட அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு, எளிதில் விசா அனுமதி கிடைக்காத வண்ணம் சட்டங்கள் கட்டாரில் அமுலில் உள்ளன
இதனால் கட்டாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்த நிலையில், கட்டாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி கட்டாரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாரை விட்டு வெளியேற , அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்டார் நாட்டில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக, அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்காக குறித்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment