கோலியின் கையில் பிரிந்த, அவரது அப்பாவின் உயிர்
நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இதுவரை வெளியில் சொல்லாத ஒரு உருக்கமான சம்பவத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விராட் கோஹ்லி கூறியுள்ள அந்த பதிவில், கடந்த 2006-ம் ஆண்டு டெல்லி மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையிலான ராஞ்சி போட்டி நடைபெற்றது.
அப்பொழுது பேட்டிங் செய்த நான் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தேன்.
அன்று இரவு முழுவதும் நண்பர்களுடன் பேசிவிட்டு அதிகாலை 3 மணியளவில் என்னுடைய வீட்டிற்கு திரும்பினேன்.
அப்பொழுது என்னுடைய தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே நான் அவரை தாங்கிப்பிடித்துக் கொண்டே உதவிக்கு பக்கத்து வீட்டார்களை அழைத்தேன். இரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை.
பின்னர் சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அதற்குள் என் தந்தையின் உயிரும் என்னுடைய கைகளிலே பிரிந்தது. நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். அந்த தருணத்தை என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது.
அன்று முதல் தான் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. என்னுடைய கனவுகளையும், தந்தையின் கனவுகளையும் நனவாக்க முயற்சி செய்தேன். அதற்காக கடுமையாக முயற்சித்தேன்.
என்னுடைய தந்தை இறந்ததால் அடுத்தநாள் விளையாட செல்ல மாட்டேன் என அனைவரும் நினைத்திருந்தனர். மற்றவர்களின் நினைப்பை பொய்யாக்கும்படி அடுத்தநாள் நான் விளையாட சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment