புளிச்சாக்குளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின், சுயதொழில் ஊக்கிவிப்பு நிகழ்ச்சி
புளிச்சாக்குளம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் ,சமூக மேம்பாட்டு பணித்திட்டத்தின் ஒரு அங்கமான சுயதொழில் ஊக்கிவிப்பு நிகழ்ச்சி புளிச்சாக்குளம் சனசமூக நிலையத்தில் சங்கத்தின் தலைவர் அஷ்-ஷெய்ஹ் நவாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
புளிச்சாக்குளம் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட விதவை குடும்ப தாய்மார்கள் மற்றும் குறைவருமானம் ஈட்டும் குடும்பங்கள் என ஐம்பது குடும்பங்களில் முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 10 நாட்டு கோழி குஞ்சுகள் விகிதம் பகிர்ந்து வழங்கப்பட்டன.
இம்முயற்சி பரீட்சாத்தமாக 25 தாய்மார்கள் குடும்பங்களைக்கொண்டு பரீட்சிக்கப்பட்டு அது வெற்றியளிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வூக்கிவிப்பு நிகழ்ச்சிதிட்டத்தில் ஆண்களும் இனைக்கப்பட்டு ஆடு வளர்ப்பு மாடுவளர்ப்பு என்று விஸ்தரிக்கப்படும்.
42 வருட வரலாற்றைக் கொண்ட இன்நலன்பரிச்சங்கமானது ஜனாஸா உதவிகளோடு மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளாது , இதுவரை பல சமூக நலப்பணிகளை செய்துவந்துள்ளது .
இந்நிகழ்வில் புளிச்சாக்குளம் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் அல்ஹாஜ் ஏ.றிஸ்வான் ,புளிச்சாக்குளம் முதியோர் சங்கத்தின் தலைவர் ஜனாப் இஸ்ஸதீன்,ஜனாஸா நலன் புரிசங்கத்தின் கௌரவ செயலாளர் எம்.நஜீப் ஆசிரியர் இன்னும் கௌரவ பொருளாளர் அல்-ஹாஜ் சித்தீக் ஆசிரியர் அவர்களோடு ஏனைய உறுப்பினர்களும் ஊரின் மூத்த முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர் .
(அஷ்ரப் ஏ சமத்)
GOOD IDEA
ReplyDelete