ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது - அநுரகுமார
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது ரூபா மிக வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவும், பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவை அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
20வது அரசியலமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு வேடிக்கையானது என்றும் அவர் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்றும், அவருக்கு ஜனாதிபதி கதிரையில் அமர இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுற்றி இருக்கும் ஆலோசகர்கள் என்ன கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி கதிரையில் அமர முடியாது என்று ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
ENTIRE POLITICIANS SPOILING OUR BEAUTY SRILANKA.POPULATION ONLY 20MILLION DAY BY DAY HAVE A PROBLEM.BUT IN JAPAN 160MILLION PEPPLE SEE HOW NICE COUNTRY???
ReplyDeleteENTIRE POLITICIANS SPOILING OUR BEAUTY SRILANKA.POPULATION ONLY 20MILLION DAY BY DAY HAVE A PROBLEM.BUT IN JAPAN 160MILLION PEPPLE SEE HOW NICE COUNTRY???
ReplyDeleteRanil only dream looking but he never become a president our country.
ReplyDelete