"மோடி இந்து இனவாதி, மகிந்த சிங்கள இனவாதி"
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள இனவாதி எனவும் இந்திய பிரதமர் மோடி இந்து இனவாதி எனவும் இதனால், மோடி தரப்புடன் இலங்கையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க மகிந்த ராஜபக்ச முயற்சிக்கலாம் என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -14- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்ரமபாகு இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு இதனை விட அதிகளவான மக்கள் வருவார்கள் என மகிந்த ராஜபக்ச தரப்பினர் எதிர்பார்த்தனர்.
எனினும் வந்த மக்கள் தொகையை கொண்டு ஏதாவது செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில் இந்தியாவுக்கு சென்று இந்தியா தமக்கு உதவுமா என பார்த்துள்ளார்.
இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி உலக இனவாத அணியை சேர்ந்த ஒருவர். முதலாளித்துவ உலகில் இன்று இனவாத அணிகளும் இருக்கின்றன.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்தில் பிரிக்ஸ்ஷிட் என்ற அமைப்பு இருக்கின்றது. இது ஐரோப்பாவில் இருந்து விலகி தாம் தனியான சக்தியாக இருக்க வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான இனவாத அணியினருடன் இருக்கும் நபர் என்பதால், மகிந்த ராஜபக்சவுடன் மோடிக்கு தொடர்பு உள்ளது.
மகிந்த சிங்கள இனவாதி, மோடி இந்து இனவாதி. இந்த இணக்கத்தின் படி இலங்கையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க மகிந்த தரப்பினர் முயற்சித்திருக்கலாம்.
இப்படியான கலந்துரையாடலை இந்தியாவில் நடத்தியிருக்கலாம் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment