ஹஜ்ஜூல் அக்பர் பதவியில் நீடிப்பாரா..? விலகுவாரா..??
-Eng.இஹ்ஸான் ஜவாஸன்-
●புதிய யாப்பு திருத்தம் 2016ம் ஆண்டு
●யாப்பு திருத்தத்தின் பின்னரான நிர்வாக தெரிவு 2018ம் ஆண்டு
●யாப்பில் திருத்தப்பட்ட குறித்த விடயம் பின்வருமாறு
"ஒருவர் தொடர்ச்சியாக இரு தடவைகள் மாத்திரமே தலைவராக தெரிவு செய்யப்பட முடியும்"
●யாப்பில் திருத்தப்பட்ட குறித்த விடயம் உடனடியாக 2016ம் ஆண்டே நடைமுறைக்கு வரவில்லை.
●யாப்பில் திருத்தப்பட்ட குறித்த விடயம் நடைமுறைக்கு வருவது 2018ம் ஆண்டு எனவே புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம் இந்த ஆண்டில் இருந்து மீண்டும் 8 வருடங்கள் இன்ஷா அல்லாஹ் அஷ்ஷெய்ஹ் ஹஜ்ஜூல் அக்பர் உஸ்தாத் அவர்கள் தொடர்ச்சியாக தலைவராக இருக்கலாம். (2018-2022-2026)
●யாப்பில் திருத்தப்பட்ட குறித்த விடயம் நடைமுறைக்கு வருவது 2018ம் ஆண்டு காரணம் யாப்பில் திருத்தம் 2016ம் ஆண்டு வந்தாலும் அந்த திருத்தங்கள் உடனே நடைமுறைக்கு வரவில்லை.
●யாப்பில் ஏற்பட்ட திருத்தங்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்திருந்தால் பின்வரும் இரு விடயங்கள் நடந்திருக்கலாம்.
1)2016ம் ஆண்டு இடைக்கால தெரிவு இடம்பெற்றிருக்கும்.
அந்த ஆண்டில் இருந்து யாப்பில் ஏற்பட்ட திருத்தமும் நடைமுறைக்கு வந்திருக்கும்.
2)அஷ்ஷெய்க் ஹஜ்ஜூல் அக்பர் உஸ்தாத் அல்லாத புதிய அமீரை நாடுவோரை போல யாப்பில் ஏற்பட்ட திருத்தத்தை கடந்த காலத்தில் பிரயோகித்து இருந்தால் 2016ம் ஆண்டே அஷ்ஷெய்க் ஹஜ்ஜூல் அக்பர் உஸ்தாத் அவர்களது தலைமை பொறுப்பு முடிவடைந்திருக்கும். அதே ஆண்டு இடைக்கால தலைவர் தெரிவு நடந்திருக்கும். ஏனெனில் கடந்த 6 தடவைகள் மொத்தமாக 24 வருடங்கள் தலைவராக தெரிவாகியுள்ளார்.
●எனவே யாப்பில் ஏற்பட்ட திருத்தம் உடனடியாக தொழிற்படவில்லை இது நடைமுறையில் ஏற்பட்ட பலவீனம் அல்லது சட்ட ஏற்பாடுகளில் உள்ள பலவீனமாக இருக்கலாம்.
●மேலும் யாப்புகளில் ஏற்படும் திருத்தங்கள், மாற்றங்கள், ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த காலங்களில் அதனை பிரயோகிக்க முடியாது. காரணம் அது கடந்த காலத்தில் நடைமுறையில் இல்லை. எனவே யாப்புகளில் ஏற்படும் திருத்தங்கள், மாற்றங்கள், ஏற்பாடுகள் எதிர்காலத்தில் பிரயோகிப்பதுவே நடைமுறை சாத்தியமாகும்.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் யாப்பு மாற்றம் தொடர்பான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு
●சாராயம்/மதுபானம் ஹராம் என்று குர்ஆன் வசனம் இறங்குவதற்கு முன்னர் மக்கள் சாராயம்/மதுபானம் குடித்தார்கள்.
●சாராயம்/மதுபானம் ஹராம் என்பது இஸ்லாமிய (இறைவனது) சட்டத்தில் இறைவனால் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடு/மாற்றம்/திருத்தம் (இதற்கு முன் இது தொடர்பான நடைமுறைகள் காணப்படவில்லை)
●இந்த சட்ட ஏற்பாடு/மாற்றம்/திருத்தம் நடைமுறைக்கு எப்போது வருகிறது, இந்த குர்ஆன் வசனம் இறங்கிய பின்னர் அதாவது அந்த கணத்தில் இருந்தான எதிர்காலத்திற்கு நடைமுறையாகிறது. ஆனாலும் இதை கடந்த காலத்தில் பிரயோகம் செய்து யாரும் தண்டிக்கப்படவும் இல்லை.
இலங்கையில் யாப்பு மாற்ற நடைமுறைக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு
●1972 ஆம் ஆண்டு யாப்பில் இல்லாத விடயங்கள் 1978 ஆம் ஆண்டு யாப்பில் இடம்பெற்று நடைமுறைக்கு வந்த பிறகு இந்த யாப்பில் உள்ள ஒழுங்குகள் 1978 இற்கு முன்பு உள்ள காலப்பகுதிக்கு பிரயோகிக்க முடிவதில்லை.பிரயோகிக்க முடியாது.
●இதற்கு நடைமுறையில் உள்ள சிறந்த எடுத்துக்காட்டு பின்வருமாறு
பிரதானமாக கொழும்பு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் 6 பேர்ச் இற்கு குறைவான காணியில் புதிதாக வீடு கட்டுவதற்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படுவதில்லை. 1972/78 இற்கு பின்னர் நடைமுறையில் உள்ள சட்டம் அவ்வாறுதான் உள்ளது. ஆனால் இந்த 6 பேர்ச் இற்கு குறைவான காணியிற்கு 1972/1978ம் ஆண்டிற்கு முன்னர் ஏதாவது ஆவனம் இருப்பின் 1972/1978ம் ஆண்டின் பின்னர் நடைமுறையில் உள்ள சட்ட ஒழுங்கு கவனிக்கப்படாது 1/2 பேர்ச் என்றாலும் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும்.
எனவே சட்டம் /திருத்தம் வந்த பிறகே அது அமுலுக்கு வரும்.
●மேலும்
ஜமாஅத்தே இஸ்லாமி என்பது உலக வாழ்க்கைக்குரிய அமைப்பு அல்ல மாறாக மறுமை வாழ்க்கைக்குரிய அழைப்பு பணிக்குரிய ஒரு இஸ்லாமிய அமைப்பு எனவே இந்த அமைப்பின் யாப்பு கூட மறுமை வாழ்க்கையை நோக்கிய இஸ்லாமிய நடைமுறை வாழ்க்கையை சார்ந்ததாக இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றியதாக அமைவதே சரியானதாகும்.
இதன்படி அமீர் (தலைவர்) தெரிவானது மஷூராவின் பிரகாரம் ஏகோபித்த முடிவில் உண்டாகுவதாகும். இதுவே இஸ்லாமிய நடைமுறையாகும்.
●உதாரணமாக
தொடர்ச்சியாக இரு தடவைகள் அமீராக இருந்த ஒருவர் மீண்டும் அமீராக வரவேண்டும் என்று மக்கள் / மக்கள் பிரதிநிதிகள் மனதளவில் விருப்பம்/மஷூரா கொண்டாலும் யாப்பில் உள்ள புதிய திருத்தம் தடுக்கும் அதாவது மஷூராவை இந்த புதிய யாப்பு திருத்தம் தடுக்கும் இது இஸ்லாமிய நடைமுறை சார்ந்ததா?
மனதில் ஒரு மஷுரா வாயில் ஒரு மஷுரா
●மேலும் சிறந்த தலைமைத்துவம் உடைய ஒருவர் இருந்தாலும் அவர் மூன்றாவது முறை தலைவராக முடியாது ஆனால் இவர் தகுதியாக இருந்தும் தகுதி உடைய ஒருவரை நியமிக்க இந்த திருத்தம் தடுக்கும். இந்த திருத்தம் தேவையா?
●தகுதியானவர் இருந்தும் தலைமைத்துவம் அவரிடம் ஒப்படைக்கப்படாமல் பிற்காலத்தில் ஏதாவது குழப்பம் தோன்றினால் யார் குற்றவாளி?
●தகுதி இருந்தும் பொறுப்பு எடுக்காதவரா?
(மூன்றாவது முறை என்னை யாப்பு தடுக்கிறது என்று தப்பி விடுவார்) அல்லது தகுதி உள்ள ஒருவருக்கு மூன்றாவது முறை கொடுக்க முடியாமல் யாப்பு மாற்றம் கொண்டு வந்தவர்களா?
●எனவே இந்த புதிய யாப்பு மாற்றம் இஸ்லாமிய பின்னணியில் தேவையற்ற ஒன்று
ஆகவே வழமையான யாப்பு நடைமுறையில் இருந்து வழமையான ஒற்றுமை மேலும் பலமாக காணப்பட இறைவன் எமக்கு உதவி செய்ய வேண்டும்.
Let him teach Muslim community; Muslim political leaders; leaders of Islamic groups; ACJU and others a lesson that is take or leave a position as and when it is suitable and appropriate ..
ReplyDeleteHe is most qualified to lead...we know 99% of people would vote for him agian if he is contesting.
Yet; he would like to teach a lesson and create a legacy in Sri Lanka..that is to teach people that they must be ready to leave their post ...this is a real sincerity..
We need to create a good tradition..sunnah ..
T
kalli valli. whether he is there or no... what is the benefit to the society???
ReplyDelete@Mohamed Mohamed, Intha himar. Maafi malum. A frog in the well.
ReplyDeleteMOAHEMED ..
ReplyDeleteYOU ARE BMIND IN YOUR HEART AND EYE ..
GO AND SEE HOW MUCH DAWA WORK HE HAS DONE ..
YOU WAHABI PEOPLE DO NOT SEE THAT ..
YOU ARE BLIND TO SEE THE CONTRIBUTION OF SUCB BRILLIANT SCHOLARS .
BECUAE YOU ARE BLIND FOLDED WITH INGORNRANCE AND ARROGANCE.