கள்ளச்சாராயம் காய்ச்சிய, பிக்கு கைது
காட்டில் மண்ணால் நிர்மாணிக்கப்பட்ட குடில் ஒன்றில் வசித்து தியானம் செய்வதாக கூறி கள்ளச்சாராயம் காய்ச்சிய பிக்கு ஒருவரை பதுரலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பதுரலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முனசிங்க உட்பட அதிகாரிகள் குழு ஹல்தொல பகுதியில் உள்ள காட்டில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் வசம் இருந்த 187 லீட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பிக்கு மத்துகமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:
ReplyDelete(மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது.
உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள்.
அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), 'வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)' எனக் கூறினார்கள்.
உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), 'இதோ பொது அறிவிப்புச் செய்பவர்,
(மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்' என்று சொன்னேன்.
அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம், 'நீ போய், இதைக் கொட்டிவிடு!' என்று கூறினார்கள்.
(மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது.
அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது.
அப்போது மக்களில் சிலர், '(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!' என்று கூறினார்.
அப்போதுதான் 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.' எனும் (திருக்குர்ஆன் 05:93 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
ஹதீஸ் எண் 4620
www.tamililquran.com/hadhees