Header Ads



மண் கவ்விய முஸ்லிம் கட்சிகள் - முதலிடம் பிடித்த ஜே.வி.பி.

செயற்பாட்டுத்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் ஜே.வி.பி. கட்சி முதலிடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் Manthri.lk இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டுத்திறன் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் செயற்பாட்டுத்திறன் கொண்ட முதல் பத்து உறுப்பினர்களில் நான்கு பேர் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

பட்டியலின் முதல் இடத்தில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார். டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இரண்டாம் இடத்திலும் , பிமல் ரத்நாயக்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காம் இடத்தில் ஐ.தே.க.வின் புத்திக பதிரணவும், ஜே.வி.பி.யின் சுனில் ஹந்துன்னெத்தி ஐந்தாம் இடத்திலும், கூட்டு எதிர்க்கட்சியின் பந்துல குணவர்த்தன ஆறாம் இடத்திலும், ஐ.தே.க.வின் கயந்த கருணாதிலக்க ஏழாம் இடத்திலும், எட்டாம் இடத்தில் ஈ.பி.டீ.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, ஒன்பதாம் இடத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஷ் குணவர்த்தன, பத்தாம் இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஶ்ரீநேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திரக்கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் முதல் பத்து இடங்களுக்குள் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. First of all what we need to do is to send some honest; dedicated and educated people into politics from Muslim community ..
    Look how Muslim politicians are working cheaply in Sri Lanka ..
    They do business with politics.
    Now ; Muslims.kmow that ..

    ReplyDelete
  2. முதல் பத்து இடங்களிலல்ல கடைசி பத்து இடங்களுக்குகூட தகுதியற்றவர்கள்தான் எமது சீதேவிகள்.
    எப்போது தெளியப்போகிறோம்?

    ReplyDelete
  3. Mr. Atteeq Abu; Our Muslim Community send our Muslim politicians for that purpose without their knowledge. Our Politicians actually don't have professions. That's why they are using politics for their businesses. Until the Muslim community change their attitude, cannot help, this will continue.

    ReplyDelete
  4. “செயற்பாட்டுத் திறன்மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்” என்டா என்னங்க? ஒவ்வொருவரும் “தங்களால் ஏன்டதை” செய்யுறாங்க. எங்கட முஸ்லீம் MP மாரும் தங்களால் ஏன்டதை மட்டும் செய்யுறாங்க. இதுல எண்ணங்க தவறு இருக்கு. இப்ப என்னங்க Dr. Kaleel, Dr. Badiyuddeen Mahmood, M.H.M. Ashraf, A.L.A. Majeed; இவங்களா இப்ப MP யா இருக்காங்க. வீரனா இருந்தா காலம் முழுவதும் பிரச்சினைங்க. காலம் முழுதும் அடிமையா இருந்துட்டா பிரச்சினையே இல்லங்க.

    ReplyDelete

Powered by Blogger.