ஜனாதிபதியையும், கோட்டாபயவையும் கொலைசெய்யத் திட்டம்
ஜனாதிபதியைக் கொல்வதற்கான திட்டம் அரசாங்கத்துக்குள்ளும் பொலிஸாராலும் முன்னெடுக்கப்படுமாயின் நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
இன்று -13- கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு பிரிவின் மேற்பார்வை பணிப்பாளர் நாமல் குமார கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் கோட்டாபய ராஜபக்ஸவையும் கிழக்கு மாகாணத்துக்குள் வைத்து கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளமைக் குறித்து சில காரணங்களை தெளிவுப்படுத்தியதாக தெரிவித்துள்ள மஹிந்தானந்த இவரது இந்த கருத்து மிகவும் பாரதூரமான ஒன்றெனவும், இந்த கருத்தால் எதிர்காலத்தில் பொலிஸ் மீதான நம்பிக்கையற்ற நிலை ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை கைது செய்வதுடன், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும் விசாரணை செய்ய வேண்டும் அத்துடன் நாமல் குமாரவுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை சந்திப்பும் இந்த விடயம் குறித்தே இடம்பெற்றதாகத் தகவல் கிடைத்துள்ளதாக மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு பிரதானியை கைதுசெய்வதற்கும், ஜனாதிபதியை கொல்வதற்கும் சிலர் தயாராகவிருக்கின்றமைத் தொடர்பில், ஜனாதிபதி உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ISIS?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteLTTE
ReplyDelete@Nawshad,
ReplyDeleteதமிழர்களை சாதி ரீதியாக பிரிக்கும் உத்தி மாற்றினத்தவருக்கு தான் தேவைபடுகின்றது என நீங்கள் நிரூபித்துவிடீர்கள்.
Hello Farook, mind your language.
ReplyDeleteJaffna muslim shouldnt post this farooks post
ReplyDeleteReally sorry bro not for all
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete