Header Ads



இஸ்ரேலுக்கு விழுந்தது இடி, ஜெருசலத்தில் திறந்த தூதரகத்தை இழுத்துமூடியது பராகுவே - உறவை முறித்தது இஸ்ரேல்

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.

எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, மூன்றாவதாக பராகுவே நாடும் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை அதன் முன்னாள் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மூலம் திறந்தது. ஆனால், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மரியோ அப்டோ என்பவர் சமீபட்தில் பதவியேற்றார்.

அவர், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் விவகாரம் அமைதியான முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி ஜெருசலேமில் திறக்கப்பட்ட பராகுவே நாட்டு தூதரகத்தை மூடிவிட்டு மீண்டும் டெல் அவிவ் நகரில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.

பராகுவே புதிய அதிபரின் இந்த் திடீர் முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், பராகுவே நாட்டில் இயங்கி வரும் தங்களது தூதரகம் மூடப்படும் என பதிலுக்கு பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த திடீர் நடவடிக்கையை சமத்துவம் அற்ற செயல் என பராகுவே அதிபர் மரியோ அப்டோ விமர்சித்துள்ளார். #Jerusalem

4 comments:

  1. யூத கிறித்தவ,முஸ்லிம்களின் புனிதத்ளம் என்று சொன்னது யார்??
    வரலாற்றை மாற்றாதீர்கள், அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான புனிதஸ்தலமாகும்.

    ReplyDelete
  2. சத்தியக் குரல் வரலாற்றை சரியாகப் படியுங்கள். ஜெருசலேம் யூத,கிறிஸ்த்தவ,இஸ்லாம் ஆகிய மூன்று மதத்தவர்களுக்குமே புனிதமான இடம் என்பதே உண்மை. கலீபா உமர் (ரழி) அவர்களின் காலத்தில் அது முஸ்லிம்களின் கைகளில் கிடைத்தது, பின்னர் முஸ்லிம்களது ஈமானிலும் அமல்களிலும் உண்டான சீரழிவின் காரணமாக அல்லாஹ் அதை எம்மிடமிருந்து எடுத்துக் கொண்டான். ஒவ்வொரு முஸ்லிமும் உண்மை முஸ்லிமாக வாழ்வது ஜெருசலேத்திற்காகச் சண்டை பிடிப்பதை விட மிக மிக முக்கியமானது. இறைவனுக்கு மாறு செய்து கொண்டு ஜெருசலேத்தைப் பிடித்து என்ன செய்ய? திருந்தவே மாட்டோம் போல.

    ReplyDelete
  3. Our India Karan valapakran asana tan eppadi kattorai

    ReplyDelete

Powered by Blogger.