முக்கிய இடங்களில் பாதுகாப்பு, கொழும்பு ஸ்தம்பிதம் அடையும் நிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகரம் முழுவதும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அலரி மாளிகைக்கு அருகில் 3 நீர்ப் பிரயோக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லோட்டஸ் சுற்றுவட்ட பாதையில் நீர் பிரயோக வாகனம் மற்றும் கலகம் அடக்கும் பிரிவு அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு நுழையும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொலிஸ் அதிகாரிகளுடனான 3 ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பத்தரமுல்லை, தியத உயன மற்றும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு நுழையும் வீதியிலும் பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், அந்த பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் மற்றும் குற்ற விசாரணை பிரிவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
Post a Comment