ரூபாவின் தொடர் வீழ்ச்சி குறித்து, மஹிந்த இன்று வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கை
இந்தியாவின் பொருளாதாரத்தினை இலங்கையின் பொருளாதாரத்துடன் ஒப்பிடமுடியாது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , தேசிய உற்பத்திகளுக்கு எதிரான இறக்குமதிகள் அதிகரிப்பே ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.
ரூபாவின் தொடர் வீழ்ச்சி குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது. தற்போது இந்நிலைமை உக்கிரமடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இறுதியில் 131 ரூபாவாகக் காணப்பட்ட டொலரின் பெருமானம் இன்று 170 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ரூபாவின் பெருமதி வீழ்ச்சியடைவதனால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என அரசாங்க தரப்பு குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனது ஆட்சி காலத்தில் அதாவது 2007 - 2008 வரையான காலப்பகுதியில் உலக பொருளாதார நெருக்கடியின் காரணமாக தென் கொரியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா , பிலிப்பைன்ஸ் உட்பட ஆசிய நாடுகளில் பணப்பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடப்பட்டு பாரிய வீழ்ச்சி அடைந்தது. அன்று காணப்பட்ட உலக பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தினை இலங்கையின் பொருளாதாரத்துடன் ஒப்பிடமுடியாது. இந்தியாவின் பொருளாதாரத்தின் ஒரு பகுதியே இலங்கை. எனது ஆட்சி காலத்தில் காணப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் இன்று ஒரு தனிக்கட்சியின் பொருளாதாரக்கொள்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
இன்று 4 வீதத்துக்கும் குறைவான பொருளாதார வளர்ச்சியே காணப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சர்வதேசத்தில் முன்னிலைப்பட வேண்டும் என்ற நோக்கில் தேசிய உற்பத்திகளுக்கு எதிரான இறக்குமதிகள் இடம்பெறுகின்றமையின் காரணமாகவே ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகின்றது என தெரிவித்துள்ளார்.
We dont know anything....about past & present & future...
ReplyDeleteBut Shall we buy another Mihin Lanka???
Shall we build another port in Mattara???
When you spend the public money during your period of reign, you have compared Sri Lanka with USA in terms of borrowing. We know very well. You said USA is borrowing money more and more and more, we have not yet reached even half of that level. So no issue of borrows any damp amount. Now you are delivering sermon Sri Lanka should not be compared with Indian economy. I do not know if there is any buffaloes to listen to your sermon.
ReplyDeleteunmayana karuthu
ReplyDelete