Header Ads



பிரான்சில் முஸ்லிம் இளைஞரால், காப்பாற்றப்பட்ட குழந்தையின் தந்தைக்கு தண்டனை


பிரான்சில் நான்காவது மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்ட ஸ்பைடர்மேனை நினைவிருக்கலாம்.

அந்த குழந்தையின் தந்தை, குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஷாப்பிங் சென்றவர், போக்கிமான் விளையாட்டு விளையாடிக் கொண்டே சென்றதால் வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகி விட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

குழந்தையின் தாயோ தங்கள் சொந்த ஊரில் இருந்தார். இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேற முயன்ற அந்த குழந்தை தவறுதலாக பால்கனியில் ஏற முயன்று, அபாயகரமான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மாலியைச் சேர்ந்த ஒரு அகதி இளைஞர் சற்றும் யோசிக்காமல் பரபரவென்று சுவர் வழியாக ஏறிச் சென்று அந்தக் குழந்தையை மீட்டார்.

தற்போது அந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும் அவர் உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. அவர் எப்போது சிறைக்கு செல்வது, அல்லது சிறைக்கு சென்றுதான் ஆக வேண்டுமா என்பதையெல்லாம் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

அந்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, எப்படி ஒரு நல்ல தந்தையாக இருப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கான வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.