தமிழர் பிரச்சினை பற்றிப் பேசும்போது, முஸ்லிம்களது பிரச்சினைகளும் இணைக்கப்பட்டாலே அதுமுழு வடிவம் பெறும்
-Hafeez-
இலங்கையில் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசும் போது முஸ்லிம்களது பிரச்சினைகளும் இணைக்கப்பட்டாலே அதுமுழமையான வடிவம் பெறும் என்று சாகித்திய மண்டல பரிசு பெற்ற எழுத்தாளர் மு.சிவலிங்கம் தெரிவித்தார். (24.9.2108)
இலங்கையில் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசும் போது முஸ்லிம்களது பிரச்சினைகளும் இணைக்கப்பட்டாலே அதுமுழமையான வடிவம் பெறும் என்று சாகித்திய மண்டல பரிசு பெற்ற எழுத்தாளர் மு.சிவலிங்கம் தெரிவித்தார். (24.9.2108)
கண்டியில் நடந்த வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவித்தாவது -
இலங்கையில் தமிழர் பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு, மலையகம், மற்றும் முஸ்லிம்கள் என சகல குழுக்களும் இணைத்தே பேசப்படவேண்டும். அப்படியாயின் மட்டுமே அது வெற்றிபெறும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை என்று எதை எடுத்தாலும் அதில் இந்தியாவின் அழுத்தம் பல்வேறு வடிவங்களில் உள்ளதைக்காண முடிகிறது.
ஊதாரணமாக ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் வாக்களர்கள் தூக்கி எரியப்பட்டார்கள். அவர்களை அவ்வாறு தூககி எரிய இந்தியாவும் துணை போனது. அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பட்டார்கள் என்பதை விட விசரப்பட்டார்கள் என்பதே பொருத்தம். ஏனெனில் அவர்கள் அங்கு பல்வேறு திசைகளில் தூக்கி எரியப்பட்டனர் சிதைந்து போயுள்ளனர். சிறுபாக்மையினரின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக்கப்பட வேண்டுமாயின் முஸ்லிமகள், மலையகம், வடக்கு, கிழக்கு என கூறுபோட்டுப் பார்க்கக் கூடாது. அவை தேசிய மயப்படுத்தப்பட வேண்டும்.
இன்று சிறுபான்மை சமூகங்னிடையே ஒரு பொதுத்தன்மை உண்டு. அது யாழ் மாவட்டததை மட்டும் பிடிக்காதுளளமை அதிஷ்டமே. ஏனைய பிரிவான முஸ்லிம்களும் சரி , மலைகமும் சரி ஒத்த தன்மை காணப்படுகிறது. அதுதான் மக்கள் ஜனநாய ரீதியில் வாக்களித்து தமது பிரதி நிதிகளை பாராளு மன்றம் அனுப்புகின்றனர். அவர்கள் அங்கு சென்று சொற்ப சலுகைகளுக்காக விலை போய் விடுகின்றனர். ஒரு பிரதி அமைச்சர் பதவியை வாங்கிக் கொண்டு வாய்பேசாது ஒதுங்கிக் கொள்கின்றனர். அல்லது பிரதி அமைச்ர் பதவியைக் கொடுத்து அவர்களை தள்ளி வைக்கின்றனர். பின்னர் தமது பிரதி அமைச்சுப் தவியை கைவிடவும் முடியாது. அதனால் சகூகத்திற்கு செய்தது எதுவம் கிடையாது. இந்நிலையில் அற்ப சலுகைக்கு விலை போனவர்கள் பற்றி இன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பலர் சினம் கொண்டுள்ள ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது.
எனவே அரசியலில் சோரம் போகாது அதே நேரம் சகல குழுககளது பிரச்சினைகளையும் இணைத்து தேசிய பிரச்சினையாக சித்திரித்து எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இன்பத் தமிழால் இணைவோம்
ReplyDeleteஇணைந்து களைவோம் அநீதி
இரும்பைவிடவும் இது வலிமை
இலங்கையை இலங்கையர்க்காக்க!
மதிப்புக்குரிய சிவலிங்கம் சேர் அவர்களே, நீங்கள் சொன்ன கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கவே இருக்காது என்று நினைக்கின்றேன். தமிழ் அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல கணிசமான தமிழ் புத்திசீவிகள்கூட உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போகலாம்; போவார்கள். ஆனால் முஸ்லீம் தலைவர்கள் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவார்களேயானால் அவர்களுடைய அரசியல் வாழ்வு முடிவுறுத்தப்பட்டுவிடும். ஆகவே அவர்கள் இதற்கு உடன்பட்டு முஸ்லீம்களும் இந்நாட்டில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கு சார்பாக இருக்க மாட்டார்கள் (என்பது என் கருத்து).
ReplyDelete