மைத்திரியின் உரையை, மகிந்தவும் மறுக்கிறார்
இறுதிக்கட்ட போரின் போது நாட்டை விட்டு தப்பியோடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போரின் இறுதி நாட்டிகளில் இலங்கையை விட்டு வெளியேறியது எனது தனிப்பட்ட விடயத்திற்காக அல்ல, அதுவொரு ராஜதந்திர செயற்பாடு என மஹிந்த தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் போரின் இறுதி நாட்களில் ஜீ-11 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜோர்தான் சென்றிருந்தேன். எனினும் இரண்டு நாட்கள் மாத்திரமே அங்கிருந்தேன்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வருகைத்தந்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன். நான் தான் போரை நிறைவுக்கு கொண்டு வந்து உத்தியோகபூர்வமாக அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போரின் இறுதி நாட்கள் இரண்டில் விடுதலை புலிகள் கொழும்பில் வான் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட விடயத்தை தான் அறிந்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் யுத்தத்தின் இறுதி நாட்களில் நான் வெளிநாடு செல்லவில்லை என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட தனக்கு இந்தியாவில் இருந்து விடுதலை புலிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட விடயம் தெரியாதென கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment