மெளலவி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு, உடனடியாக விண்ணப்பிக்க கோரிக்கை
மெளலவி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதால் அதற்கான தகுதியுடைய மெளலவிமார்கள் அனைவரும் குறிப்பிட்ட திகதிக்குள் விண்ணப்பிக்குமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் பீ.எம். பாரூக் கருத்துத் தெரிவிக்கையில், பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மெளலவி ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1600 பேர் தோற்றியிருந்தபோதிலும் 113 பேர் மட்டுமே அதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். பரீட்சையில் தேறியவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டது. பரீட்சையில் சித்தியடையாதவர்கள் நியமனம் பெறத் தகுதியற்றவர்கள். பரீட்சையில் சித்தியடையாது வெறுமனே அரசாங்கத்தைக் குறைகூறுவதில் எவ்வித பயனுமில்லை. தற்போது நாட்டில் 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதால் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தகுதியுள்ள மௌலவிமார்கள் அனைவரும் அதில் தேர்ச்சியடைவதன் மூலம் தமது தகுதிகளைக் கூட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்டு விட்டுப் பின்னர் வருந்துவதில் பயனில்லை. அரசாங்கப் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாதவர்களுக்கு எவ்விதமான அரச நியமனங்களும் வழங்கப்படமாட்டாது என்பதையும் நாம் உணரவேண்டும் என்று கூறிய அவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இதற்கான வழிகாட்டல்களை வழங்கத் தயாராக இருக்கிறது என்றும், அது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0770 550 557 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்
-Vidivelli
Post a Comment