Header Ads



சட்டத்தரணி சறூக்கின் குமுறல்

அடிவாங்கிய மக்களின் உளக்குமுறலை உயர்நீதிமன்றில் வெளிப்படுத்தாத சமூகத்தின் காவலர்கள்.

அண்மைய கண்டி கலவரத்தில் தமது கடைமையை சரியாக சொய்யாமல் சிங்கள காடையர் கும்பலுடன் சேர்ந்து முஸ்லிம்களை தாக்கிய பொலிசார்,முப்படையினர் மற்றும் விசேட அதிரடைபடையினர்களுக்கு எதிராக 27 வழக்குகளை முஸ்லிம் சிரேஷ்ட சட்டத்தரணிகளால் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.

கடந்த 19/09/2018 ல் முதலாவது விளக்கத்தின் பின்னர் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுசெயளாளர் சட்டத்தரணி சகோதரர் ரஷ்மரா ஆப்தீன் வழக்குகளில் என்ன நடந்த து என விவரிக்கையில் (உரையாடல் வடிவில்)

சட்டத்தரணி பாயிஷ் முஷ்தபா: 

"செயற்படாமை தொடர்பாகவே பேசவே வந்தோம்"

அரச சட்டத்தரணிகள்:

"நாம் செயற்படாமலிருக்கவில்லை சம்பவத்துடன் தொடரபுடைய எல்லோரையும் கைது செய்துள்ளோம், அதற்கான வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன."

எமது சட்டத்தரணிகள்: "உங்களது செயற்பாடு எம்மை திருப்தியடைய செய்யவில்லை 

 பிரதம நீதியரசர்:-(அரச சட்டத்தரணிகளை நோக்கி)

"இது வரை நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்வரும் 21/11/2018 க்கு முன் கோப்பிலிடுவதுடன் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளுக்கும் பிரதிகளை வழங்குங்கங்கள்.அவ்வறிக்கைகளின் 
படி இந்த வழக்கை தொடரந்து நடாத்துவதா?இல்லையா ?என எதிர்வரும் 5/12/2018 முடிவெடுப்போம் .(எமது சட்டத்தரணிகளை நோக்கி)"கைது செய்யப்படாத குற்றவாளிகளிருப்பின் அவர்களின் விபரங்களை நீங்கள் சட்டமா அதிபருக்கு வழங்கி அவரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள"

எனக்கூறியதுடன் வழக்கை 5/12/2918 க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தவழக்கில் பாதிக்கப்பட்டமக்களின் எதிர்பார்ப்பு  என்ன? 

குறிப்பிட்ட அந்நிகழ்வு நடந்த போது கடைமையிலிருந்த அனைத்து பொலீசார் முப்படை வீர்ர்கள் மற்றும் விசேட அதிரடிபடையினரை பதவிகளிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவதும் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டை குறிப்பிட்ட படையினரிடமிருந்து பெறுவதுமேயாகும்.அதற்காகவே வழக்கிடப்பட்டது,

இதற்காக தவறு செய்த குறிப்பிட்ட படைவீரர்களின் தலைமையதிகாரிகளுக்கு மன்றில் தோன்றும் படி அழைப்பாணைகள் வழங்கும்படி உயர்நீதிமன்றத்தை எமது சிரேஷ்ட சட்டத்தரணிகள் வேண்டியிருக்க வேண்டுமே! ஏன் செய்யவில்லை ?அதில் எம்மைச்சேர்ந்த அனேகமானவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் என்பதாலா?

இது சம்பந்தமாக எனது சக சட்டத்தரணிகளிடம் பேசிய போது "எமது சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கு பொலிடிக்கல் பிரசர் இருந்திருக்கும்" என்றனர். "அப்படியொரு நிலைமை இருந்திருந்தால் தாங்கள் விலகிவிட்டு அல்லாஹ்வின் பிரசரை சுமந்த எம்மைப்போன்ற சட்டத்தரணிகளுக்கு வழிவிடவேண்டியதுதானே! "என்றேன்.

 தற்போதெல்லாம் அடிபட்டு மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருக்கும் கண்டியைச்சேர்ந்த சதக்கத்துள்ளாஹ் மவ்லவியின் முகம் என் மனத்திரையில் அடிக்கடி தோன்றி "உனக்கு அல்லாஹ் தந்த சட்ட அறிவு அமானிதத்தை என்ன செய்கிறாய் நான் மவ்தாகினால் மறுமையில் உன்னை இறைவனிடம் மாட்டிக்கொடுப்பேன்" என கோபத்துடன் எனக்கு தொந்தரவு தந்துகொண்டிருக்கிறது.

சட்டத்தரணி சறூக் - கொழும்பு

2 comments:

  1. May Allah help our brothers in this issue and make the so called Muslim lawyers of the gov. to understand that they are going stand in front of Allah in this regard on the Day of kiyama

    ReplyDelete
  2. May Almighty Allah give you more strength to fight for the justice and protect you from evils.

    ReplyDelete

Powered by Blogger.