Header Ads



சகல முஸ்லிம் தலைமைகளுக்கும், அதாவுல்லாவின் அரைகூவல்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் பலம் பொருத்திய கட்சியாக மாறுவதுடன், பேரம் பேசுகின்ற சக்தியாகவும் மாறுவோம் என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு மூதூரில் நடைபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். அது காணிப் பிரச்சினையாக இருக்கலாம் அல்லது மீன் பிடிப் பிரச்சினையாக இருக்கலாம்.

அல்லது மேய்ச்சல் தரை, விறகுப் பிரச்சினை, மணல் ஏற்றுவதில் பிரச்சினை இப்படியாக கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கின்றது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் பல பிரச்சினைகள் தலை தூக்கி வருகின்றன.

வடக்கு, கிழக்கு இணைப்பு அல்லது தமிழ் கிராமங்களை வழங்குவதையோ அல்லது காணிகளை வழங்குவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கில் இருகின்ற ஒரு தலைவர் முன்னே வருகின்ற செயற்பாட்டுக்கு யாரும் விட்டுக்கொடுப்பதில்லை. இன்று தமிழர், சோனகர் என்ற பாகுபாடுகள் இருந்து வருகின்றது.

வெளிநாட்டு சக்திகளின் மூலம் கிழக்கில் உள்ள வளங்கள் சுரண்டப்படுகின்றன. அதனை அனைவரும் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

இப்போது எங்களுடைய வளங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இம்மாவட்டத்தில் அனைத்து தலைமைகள் நான் தான் தலைமை என்றொல்லாம் கூறித்திரிகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டத்திற்கு ஒரு தலைமை வேண்டும் இன்று கிண்ணியாவில் பல பிரச்சினைகள், கந்தளாயில் வயல் நிலப் பிரச்சினைகள் இருகின்றது.

தேசியக் காங்கிரஸின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது. அதற்காக அரசியல் தலைமைகள் நாளுக்கு நாள் வந்து சேர்ந்து வருகின்றார்கள்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்று தனிநபராக இருந்து நாடாளுமன்றில் குரல் கொடுத்தவன் நான். அந்த வகையிலே தான் எப்போதும் கிழக்கு மாகாணம் தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றேன்.

தற்போது நாட்டில் இரண்டு தலைமைகள் இருகின்றார்கள். இது ஒரு போதும் சாத்தியப்படாது. எப்போதும் பிரச்சினையாகவே இருக்கும். இலங்கை திரு நாட்டில் ஒரு ஜனாதிபதியே நாட்டை ஆள வேண்டும்.

நாட்டில் மாகாண சபை பிரிப்புகள் என்பது சட்டரீதியாக பிரச்சினைகள் இருக்கின்றது. அத்தோடு உள்ளூராட்சி தேர்தலுக்கான சட்ட செயற்பாடுகள் நான் அமைச்சராக இருக்கும் போதே எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது.

நான் அனைத்து முஸ்லிம் தலைமைகளுக்கும் அரை கூவல் விடுக்கின்றேன். மாகாண சபை தேர்தல் தொடர்பாக இணைந்து அரைகூவல் விடுவோம் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினை இல்லாமல் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.