கட்டுநாயக்காவில் இரகசிய குழு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரகசிய சுற்றி வளைப்பு மேற்கொள்ளும் வலையமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கொண்டு வரப்படும் கோடிக்கணக்கில் பெறுமதியான பொருட்களை பறிமுதல் செய்வதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனைக்கு அமைய இரகசிய பொலிஸார் மற்றும் சுங்க பிரிவின் முடி மூடி அணிந்த அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சுற்றிவளைப்பின் மூலம் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தார்.
சில காலங்களாக இலங்கைக்கு இரகசியமான முறையில் மிகவும் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இதன் காரணமாக பல கோடி ரூபா வருமானத்தை சுங்க பிரிவு இழந்து வருகின்றது.
அவ்வாறு கொண்டு வரும் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக மிகவும், திறமையான அதிகாரிகள் முகமூடி அணிந்து நுட்பமான முறையில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment