மோட்டர் சைக்கிள் ஓட்டுனருக்கு 88000 ரூபாய் அபராதம்
தனமல்வில, செவனகல பொலிஸ் பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் ஓட்டுனர் ஒருவருக்கு 88000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறிய போதிலும் நிறுத்தாமல் பயணித்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் செவனகல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்தமை உட்பட 9 குற்றச்சாட்டுகளுக்கு குறித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் குற்றவாளியாகியுள்ளார்.
இதன் காரணமாக 88000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
21 வயதான இளைஞரே இவ்வாறு குற்றவாளியாகியுள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு எதிராக விதிக்கப்பட்ட அதிக கூடிய அபராத தொகைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment