இன்னும் 8 வருடங்களில், இலங்கை செல்வந்த நாடாகிவிடும் - மங்கள
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள் பணத்தை மீண்டும் அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் டொலரின் பெறுமதி பலமடைந்துள்ளது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் வீழ்ச்சி தொடர்பாக நேற்று (25) நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சி காண்பதை அரசாங்கம் என்ற ரீதியில் மிகவும் வெற்றிகரமாக முகம்கொடுத்ததாகவும், ரூபாவின் பெறுமானம் குறைவதைத் தவிர்ப்பதற்காக அந்நிய செலாவணியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் அதனைச் செய்யவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரூபாவின் பெறுமானம் 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்த காலத்திலேயே கூடுதலாக வீழ்ச்சி கண்டிருந்தது. அன்று ரூபாவின் பெறுமானம் 14 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுகின்றது. இந்த நிலமை காரணமாக உலக நாடுகள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
இம்முறை ரூபாவின் பெறுமானம் 9 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் 11 சதவீதத்தினாலும், இந்தோனேசியாவில் 8.9 சதவீதத்தாலும். கொரியாவில் 8 சதவீதத்தினாலும் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ரஷ்யா நாடுகளின் நாணயங்களும் வீழ்ச்சி கண்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தை பலமாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கும் செல்வந்த நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டார்.
வட-கிழக்கு பல வருடங்களுக்கு முன்னரே ஷெல்-வந்த பகுதிகளாகி விட்டதே
ReplyDeleteஎனது வாப்பாவின் வாப்பாவுக்கும்,வாப்பாவுக்கும், எனக்கும் படிப்பிக்கப்பட்ட, எனது மகனுக்கும் எனது மகனின் மகனுக்கும் பாடசாலையில் படிப்பிக்கபடகூடிய ஒரு பாடம்
ReplyDelete"இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு"
say whatever you want until next parliament elections.
ReplyDeleteWhat a joke????
ReplyDelete