கோதுமை மா தயாரிப்பிலான சகல, உணவுப்பொருட்களும் 5 ரூபாவால் அதிகரிக்கிறது
1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்க, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து, பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலையை அதிகரிப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கடந்த வாரம் அறிவித்த நிலையில், தற்போது கோதுமை தயாரிப்பிலான அனைத்து உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோரை பாதுகாப்பதற்காகவுள்ள நுகர்வோர் அதிகாரசபை எந்தவொரு தலையீட்டையும் செய்யாமையால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
Post a Comment