பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 4 தேரர்களும், பிணையில் வெளியே வந்தனர்
அரச உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நான்கு தேரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி நான்கு தேரர்களும் ஒன்றரை லட்சம் பெறுமதியான தலா ஒரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினர் நடத்திய பேரணியொன்றில் அரச சொத்துக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, விசேட தேவையுடைய இராணுவத்தினர் சிலர் இன்று எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் லோட்டஸ் சுற்றுவட்டம் சிறிதுநேரம் மூடப்பட்டது.
அவர்கள் இன்று காலை தமது பேரணியை கொழும்பு - கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பித்தனர்.
இந்த பேரணியில் சில பிக்குமார்களும் இணைந்து கொண்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Look at the faces of these criminals....
ReplyDeleteterrorist of the world
ReplyDeleteTea pot is calling the kettle black
ReplyDeleteThese guys head is full of shit that is why they speak on the language of Racism and seeing minorities Muslims and Tamil as enemy of our mother land
ReplyDelete