Header Ads



2 கைகளுமின்றி, சாதிக்கத் துடிக்கும் சிறுமி


உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படுகின்றன.

பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும்.

ஊனமுற்ற குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களுக்கு சாதாரண குழந்தைகளை போல் எல்லா விவரங்களையும் தெரிவித்து சமூகத்தில் தன்னம்பிக்கை உள்ள குழந்தைகளாகவும் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு பிறப்பிலே இரண்டு கைகளுமின்றி பிறந்து வாழ்க்கையை வென்று முன்னுதாரணமாக திகழ்பவர் தான் துலாஞ்சலி ஆரியதிலக.

என்னை இந்த நாடு முழுவதும் அடையாளம் கண்டது சோமரத்ன திசாநாயக்க மாமாவின் பட்டாம்பூச்சி இறக்கைகள் என்ற திரைப்படத்தின் மூலம்.

உண்மையைச் சென்னால் அந்த திரைப்படம் தான் என்னை முழுமையாக மாற்றியது. 13 ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்த திரைப்படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 9 வயது.

அதுவரை நான் பாடசாலை செல்லவில்லை. நான் மட்டுமல்ல எமது இல்லத்தில் இருந்த மற்ற சகோதர, சகோதரிகளும் பாடசாலைக்குச் செல்லவில்லை.

பட்டாம்பூச்சி இறக்கைகள் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு பாடசாலை செல்ல வாய்ப்புக் கிடைத்து. ஏனென்றால் அதற்கு முன்னர் பாடசாலைக்கு செல்ல எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால் படத்தில் நடித்தவுடன் பயம் இல்லை.

என்னுடைய கை இரண்டும் இல்லாத காரணத்தினால் குழந்தை பருவத்தில் இருந்து கால்களாலே வேலை செய்கிறேன்.

இசைக்கருவி வாசித்தல், எழுதுதல் மற்றும் ஏனைய வேலைகள் எல்லாமே கால்களினாலே செய்தேன். அவ்வாறு எழுதி தான் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 6 ஏ சித்தியும், பி சித்தி ஒன்றும், சி இரண்டும் பெற்றேன்.

அதன்பின் உயர்தரம் படித்தேன். அதில் இரண்டு ஏ மற்றும் பீ கிடைத்தது. நான் ஏ 3 கிடைக்குமென்று எதிர்பார்தேன்.

ஆனால் இரண்டு பாடங்களுக்கு ஒரே நாளில் ஆறு மணி நேரம் எழுத வேண்டி இருந்தது. அது மிகவும் கடினமாக இருந்தது. கடைசி கேள்வியை எழுதாமல் விட்டேன். அதனால்தான் அந்த பாடத்திற்கு 'பி' கடன் கிடைத்தது. அதனால் நான் கவலைப்படவில்லை.

இவை என்னுடைய புத்தகங்கள். எங்கள் வீட்டிற்கு வருகின்ற அனைவரிடமும் புத்தகங்களை கேட்கிறேன்.

ஒரு நாளில் ஒரு புத்தகத்தை வசித்து முடிக்கிறேன். இந்த நாட்களில் பரீட்சை முடிந்துவிட்டதால் புத்தகங்களை வாசிக்கிறேன்.

நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை இப்படி வருவேன் என்று என துலாஞ்சலி ஆரியதிலக தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.