Header Ads



நாளை அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி - 25 ஆம் திகதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி நாளை நியூயோர்க் செல்கிறார். எதிர்வரும் 25ஆம் திகதி மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன் போது, படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருந்தார்.

நியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது, பக்க நிகழ்வாக, சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.