அலரி மாளிகையில், திருமணம் நடத்த விரும்புகிறீர்களா? - 21 லட்சம் ரூபா கட்டணம்
அலரி மாளிகையில் திருமண நிகழ்வினை நடாத்துவதற்காக செலவாகும் தொகை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரட்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வு அலரி மாளிகையில் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை தொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், சதுரவின் திருமண நிகழ்வினை அலரி மாளிகையில் நடாத்துவதற்காக இருபத்து ஒரு லட்சம் ரூபா கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
சதுர சேனாரட்ன, திருமண நிகழ்விற்கான அலரி மாளிகையை பயன்படுத்தியமைக்காக இருபத்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை கட்டணமாக செலுத்தியுள்ளார் என பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அலங்காரம், உணவு, பானங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பணத்தில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அலரி மாளிகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை மறந்து விட்டு, சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
How is it possible to issue an official cheque for a private wedding as hall and other charges?
ReplyDeleteThis is not an official cheque
ReplyDelete