2030 ஆம் ஆண்டுவரை, நீடிக்கப்போகும் ரணில்
72 ஆவது வருடப்பூர்த்தியை இன்று -07- கொண்டாடும் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் மிகப்பெரிய தனி அரசியல் கட்சியாகும்.
எனினும், ரணில் விக்ரமசிங்க தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி அதிகாரத்தை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 24 ஆண்டுகளில் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற முடியாமற்போனது.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறினர்.
1949 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு தற்போது 69 வயதாகின்றது.
72 ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியில் அதிகக் காலம் தலைவராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க 24 வருடங்களாக அந்தப் பதவியில் நீடிக்கின்றார்.
இந்த நிலையில், 2030 ஆம் ஆண்டு வரை ஆசனத்தை விட்டுச் செல்வதில்லை என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அப்படியாயின் இவனொரு சர்வாதிகாரி.ஐரோப்பாவின் மாதிரி இலங்கையிலும் அறிமுகம் செய்ய வேண்டும் கட்சி தலைவரை புதிதாக தேர்வு செய்யவேண்டுமென்றால் அந்த அந்த கட்சிக்குள்ளே ஒவ்வொரு 4 வருடத்துக்குள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படல் வேண்டும் அதிலும் கட்சி தலைவராக 2 முறைக்கு மேல் வரமுடியாது.
ReplyDelete