Header Ads



காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் 2019 மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அறபுக் கல்லூரியான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2019ம் ஆண்டு புதிய கல்வி ஆண்டிற்கு ஷரீஆ (கிதாபு), அல்குர்ஆன் மனனம் (ஹிப்ழு)ப் பிரிவுகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் இயக்குநர் சபைச் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) பீ.ஏ. தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்;.... ஷரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 13 வயதிற்கு மேற்படாத 2018ம் ஆண்டு பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் அல்குர்ஆனைப் பார்த்து சரளமாக ஓதத் தெரிந்தவர்களும்;, அல்குர்ஆன் மனனம் (ஹாபிழ்) பிரிவுக்கு 11 வயதிற்கு மேற்படாத 2018ம் ஆண்டு பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் அல்குர்ஆனைப் பார்த்து சரளமாக ஓதத் தெரிந்தவர்களும் 20.10.2018ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை நேரில் பெற விரும்புவோர் கல்லூரிக் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பிப்போர் அவசியமாக விண்ணப்பதாரியின் முழுப்பெயர்,வயது, கல்வித்தரம், சேர விரும்பும் பிரிவு, வதிவிட விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர். ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி, காத்தான்குடி. என்ற முகவரிக்கு அனுப்பிவைப்பதுடன், மேலதிக விபரங்களுக்கு 0779330778,0773526763 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அத்தோடு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழில் பரிச்சயம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். இன்ஷா அல்லாஹ் நேர்முகப் பரீட்சை 2018 நவம்பர் 3ம்,4ம் திகதிகளில் நடைபெறும்.

குறிப்பு: இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர் தர (கலைப்பிரிவு) பரீட்சைகளுக்கும்,அரசாங்கத்தால் நடாத்தப்படும் அஹதிய்யா, அல்ஆலிம்,தர்மாச்சார்ய சான்றிதழ் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


No comments

Powered by Blogger.