“நாட்டு மக்களுக்காக போராடியதால், எனது திருமணத்தை 11 வருடங்களாக தள்ளி வைத்திருந்தேன்”
அலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்னவின் திருமணம் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருந்தது.
மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வால் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை தொடுத்திருந்தனர்.
சதுரவின் திருமண நிகழ்வினை அலரி மாளிகையில் நடத்துவதற்காக 21 இலட்சம் ரூபா கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது திருமணம் குறித்து சதுர சேனாரட்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
“நாட்டு மக்களுக்காக போராடியதால் நான் எனது திருமணத்தை 11 வருடங்களாக தள்ளி வைத்திருந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சதுர சேனாரத்ன போன்ற தியாகிகள் இந்த நாட்டில் இருந்தால் நாடு சௌிப்பாக முன்னேறுவதில் என்ன குறை இருக்கின்றது. அன்னார் தன் வாழ்க்கையின் 11 வருடங்களை நாட்டுக்காக அர்ப்பணித்து தியாகம் செய்து நாடு 11 வருடங்களில் நாடு முன்னேறியபிறகு தான் தனது சொந்த வாழ்க்ைக பற்றி கவனம் செலுத்தியிருக்கின்றார். இதுதான் தியாகம், வீரம்!
ReplyDelete