10.000 உலமாக்கள் குழம்பிப் போய், 200 மத்ரஸாக்கள் நிலை தடுமாறியுள்ளன - ரிஸ்வி முப்தி கவலை
சலீம் மர்சூப் தலைமையிலான பிரிவினர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷாபி மத்ஹபுக்கு மாற்றமான திருத்தங்களை சிபாரிசு செய்துள்ளதனால் இந்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். 200 க்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் நிலை தடுமாறியுள்ளன என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.தொடர்ந்தும் அவர் ‘விடிவெள்ளி’ க்கு கருத்து தெரிவிக்கையில்;
“எமது நாட்டில் ஷாபி மத்ஹப் 1000 வருடகால வரலாற்றினைக் கொண்டதாகும். மிகவும் விசாலத்தன்மையானதாகும். ஷாபி மத்ஹபின் விசாலத்தன்மை காரணமாக ஹனபி, ஹம்பலி, மாலிகி இமாம்களின் கருத்துகளையும் தாராளமாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. 8½ வருடகால குழுவின் அமர்வுகளில் எல்லா விடயங்களிலும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டுள்ளது. உலமா சபை குழுவுடன் ஏழு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. உலமா சபையின் பத்வாக்குழு கலந்துரையாடல்களின்போது தெளிவுகளை வழங்கியுள்ளது.
எமது நாட்டில் 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த ஷாபி மத்ஹபுக்கு முரணல்லாத மற்றும் ஷரீஆவுக்கு முரணல்லாத திருத்தங்களுக்கு உலமா சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்தா (நஷ்டஈடு) விவாகரத்தின்போது பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும். மற்றும் காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்கள் ஜுரிகளாக நியமிக்கப்பட வேண்டும். காதி ஆலோசனைச் சபையில் பெண்கள் நியமனம் பெற வேண்டும் எனும் விடயங்களில் உடன்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நிலைப்பாட்டினையும் சிபாரிசுகளையும் 2010 ஆம் ஆண்டிலேயே குழுத் தலைவர் சலீம் மர்சூபிடம் தெரிவித்துவிட்டது. அன்று கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் பத்வாக்குழு தனது நிலைப்பாட்டினை தெளிவாக விளக்கிவிட்டது. தனது நிலைப்பாட்டினை அன்று உலமா சபை தனது ஏனைய அங்கத்தினருக்கோ, ஊடகங்களுக்கோ கூட தெரிவிக்கவில்லை. 2017 இல் உலமாக்கள் அடங்கிய தரப்பு சலீம் மர்சூபிடம் 90 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை கையளித்தது.
இன்று பல்வேறு தரப்புகள் உலமா சபை மீது குற்றங்களைச் சுமத்தி வருகின்றன. உலமா சபை திருத்தங்களை விரும்பவில்லை. எதிர்க்கிறது என்று கூறி வருகிறார்கள். மக்களைத் திசை திருப்புவதற்குப் பள்ளிவாசல்கள் உபயோகப்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
சலீம் மர்சூப் தயாரித்துள்ள அறிக்கை 100 வீதம் ஷரீஆவுக்கு உட்பட்டதெனவும் பள்ளிவாசல் மிம்பர்களில் இது பற்றி தவறாகப் பிரசங்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள்.
பள்ளிவாசல்களும் மிம்பர்களும் மக்களை நல்வழிப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றனவேயன்றி மக்களை வழிகெடுப்பதற்கல்ல.
ஷாபி மத்ஹப்தான் எமது நாட்டில் பிரச்சினை என்கிறார்கள். பள்ளிவாசல்கள் மக்களைக் குழப்பவில்லை. பொதுபலசேனா அல்லாஹ்வையும் நபிகள் நாயகத்தையும் அவமதித்துப் பேசிவிட்டு பின்பு அவ்வாறு நாங்கள் அல்லாஹ்வையும் நபிகள் நாயகத்தையும் அவமதிக்கவில்லை என்று கூறுவதற்கு அவர்களின் கூற்று சமமாகும்.
உலமாக்கள் ஒன்றுமே அறியாதவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். இன்று மார்க்கத்தின் தூண்களாக நிற்பவர்கள் உலமாக்களே. அவர்களை குறைத்து மதிப்பிட எவராலும் முடியாது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்கு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினாலே குழு நியமிக்கப்பட்டது. குழுவில் பெண்கள் நியமிக்கப்பட்டது தொடர்பில் நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என்று தெரிவிப்பது நகைப்புக்குரியதாகும். அவ்வாறு கூறுவதற்கு உலமா சபைக்கு எந்த அதிகாரமுமில்லை.
இலங்கையில் மஸ்ஜிதுகளில் ஆமீன் கூறும்போது உரத்த குரலில் இமாம் உட்பட தொழுகையில் ஈடுபடுபவர்கள் கூறுவார்கள். இது எமது நாட்டின் ஆயிரம் வருட காலம் பழைமை வாய்ந்த ஷாபி மத்ஹபின் வழமையாகும்.
இதேபோல் சூரத்துல் பாத்திஹாவை இமாம் ஓதுவது போன்று அவரைப் பின்பற்றி தொழக்கூடிய ஒவ்வொருவரும் ஓதுவார்கள்.
ஆனால் ஹனபி மத்ஹபில் உரத்தகுரலில் ஆமீன் கூறுவதில்லை. அத்தோடு சூரத்துல் பாத்திஹாவை இமாமை பின்பற்றி தொழுபவர்கள் ஓதக்கூடாது. தற்போது எமது நாட்டில் 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த ஷாபி மத்ஹப் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இதை நீக்கு என்று சொன்னால் ஆமீன் பலமாகக் கூறாதே என்றும் சூரத்துல் பாத்திஹாவை பின்னால் ஓதாதே என்று சொன்னால் நாட்டிலுள்ள இமாம்கள், உலமாக்கள் சகிப்பார்களா?
பெண்கள் திருமணம் செய்யும்போது ‘வொலி’ அவசியம் என ஷாபி மத்ஹபில் தெரிவித்திருக்கும்போது அதை நீக்கு என்றால் உலமாக்கள் நாட்டு மக்கள் தாங்கிக்கொள்வார்களா?
ஷாபி மத்ஹபுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய சிபாரிசுகளை வெளியிட வேண்டாம். அதனால் பிரச்சினைகளே உருவாகும் என்று நாம் கூறினோம். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு அதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனாலேயே முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன” என்றார்.
ARA.Fareel
You have rightly said it ..
ReplyDeleteClerics are in turmoil and chaotic mind sets ?
Whose fault is it ?
Clerics need to know how modern world work and modern social changes take place ?...
Following one set of legal school is not what Islam demanded ?
Look before Imam shafi ...which school all companions followed ?
Think with some logics ..
What justice Saleem did was 100% ..
He did with his legal expertise in law ..
If Sri Lanka government passed laws we only obey common law ..
But for our privilege; rights and concession ..
Sri Lankan government asked Muslim community to make some amendments for old rules of Muslim marriage laws ..
Sri Lanka government is kind enough to do this ..
We Muslim community ...people like you do not have skills and knowledge or even common sense you appreciate this offer and consult learned people to make change ..
YOU do not need to be experts to do this change ..
Islam is so flexible religion to incorporate laws ..
How many complimentary sources of law are in Islamic Law ..
مصلحة المرسلة..
الاستصحاب..
الاسحسان..
ومقاصدالشريعة..
فقهالأولويات وفقهالاقليات و..
I wonder if all these clerics read these classical legal theories?
If they do they would confuse anyone ? They would not oppose any changes in marriage law ..
Very true, unfortunately former appeal court judge Saleem Marsoof has no any ulterior motive when he engaged in the preparation of MMDA, as far as we know, he had devoted his time and effort only for the sake of Allah and for the better of this umma while we have a serious doubt on those who claim that they are confused and confronted for all those support Judge Saleem Marsoof's report, I am quite agree with the above comments as many of the so called ulamas read and have familiar with مصالح المرسلة، الاحسان، مقاصد الشريعة etc. May Allah guide this Umma to the right path.
ReplyDeleteAtteeq abu
ReplyDeleteWhere did you learn sharia? Saleem marsoof committee has no muslim scholar to give religious views.on the other side there are muslim scholars,renowned lawyers.scholars are truly abides allah guide lines. Please don't promote other ideas here
SINAN Mohamed.. Where did these so called Islamic scholars learn? from Taliban style Islam? deobandi Islam? or Tablighi Islam.. all are not relevant to Modern times. Saleem Mahroof is more knowledgeable in Law than anyone of these Mullah.. What about justice Weeramanthi who wrote about Muslim law in Sri Lanka? where did he learn about Islamic law..
ReplyDeletemost of lawyers are with Saleem Mahroof groups..People in ministry of justice are with them. Why did parliament approve it. It means your so called group does not know how flexible is Islamic law.. of course some aspect of Islamic law are immutable. you can not make five prayer into 2 time or you can not make fasting into another month or hajj in another place. these are fixed Islamic law.. yet, in the areas of human transaction and dealing like businesses, marriage laws, and some other areas of human dealing Allah give more space and room for development.. Did prophet eat same way we eat today? did prophet travel in the same way we travel today? did the prophet dress in the same way we dress today? some areas of human development are acceptable in Islam..
Moreover, Why these Mullah panics.. do we have authority to stop any changes in Sri Lanka if parliament passed laws? no. at least, out of respect and concession or religious privilege.. we should know how to live in a non-Muslim country like this.. do not misguide Muslim community.. ACJU is not equipped enough with modern knowledge and deep Islamic knowledge to apply Islamic law in non-Muslim community like that of ours..
Did the Qura'n with it 6666 verses give ready made answers to all the problems of humanity. Of course, The Holy Qura'n set basic broader outlines of guidelines to all the problems of humanity and yet, for specific problems we need to find answers in line with the general guidance of the Qura'n and Sunnah. The classical Islamic scholars lived in Muslim community and they did not foresee the problems of Muslim minorities so you can not find answers to our problems in their books. yet, these Mullahs read only those books to find answers. that is why today, clerics are confused? do not know what to do .
This issue is not personal problem of Justice Saleem Mahroof.. but it is problems of the Muslim community. All what he did was to protect the interest of the Muslim community? I do not know about Faiz Mustafaz's knowledge in Islamic law? if he support these outdated clerics I doubt about his knowledge in Islamic law.. It looks he is influenced by some outdated religious legal thoughts. or schools of thought.. such as Kanduri parties or Tablighis version of Islam..
He may be an expert in common law but not in Islamic law...
பின்பற்றபட வேண்டியது குர்ஆன் ஹதீஸா ஷாபி மத்ஹபா?
ReplyDeleteஹனபி மத்ஹப் இஸ்லாம் இல்லையா?
The ACJU is a gang of "MUNAAFIKKS". They should be opposed by the Sri Lanka Muslim Community totally and changes have to be brought in their management. The biggest culprit Rizvi Moulavi (who calls himself "As" Sheik") should be prosecuted for the number of financial frauds he has been doing as the President/Chairman of the ACJU, and for misappropriating "Halal Certificate" funds, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".
மாண்மிகு ஹஸரத் அவர்களே! நாட்டிலுள்ள இமாம்கள் உலமாக்களுக்கு ஓதிக்கொடுக்கும் மதரசாக்களின் பாடத்திட்டதை மாற்றி மத்ஹப்களுக்கு முன்னுரிமை வழங்காது குர்ஆன் ஹதீஸூக்கு முன்னுரிமை வழங்ககும் இமாம்கள் உலமாக்களை உருவாக்க வேண்டும். இன்னும் சில உலமாக்கள் கடும் இறுக்கமாக இருக்கும் சில விடயங்களில் நீங்கள் மிகவும் விட்டுக்கொடுப்புடனும் முதுர்ச்சியுடனும் நடந்து கொண்டிருப்பதனை அறிந்து இந்த நாட்டில் நீங்கள் முஸ்லீம் சமூகத்திற்கு தலைமை வகிக்கும் காலத்தில் வாழ்வதனை இட்டு சந்தோஷம் அடைவதுடன். தங்களின் சுகமான நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கின்றேன்.
ReplyDelete