Header Ads



உலகில் நம்பர் 1 பணக்காரர், இலங்கையரிடம் கற்ற விடயம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான Jeff Bezos, இலங்கை நண்பர் குறித்து மனம் திறந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்த நண்பர் ஒருவரின் அபார திறமை குறித்து, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி Jeff Bezos கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை நண்பரான யொஷாந்த கற்பித்த மிகசிறந்த பாடத்தை, வொஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் Jeff Bezos கருத்து வெளியிட்டார்.

Princeton பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நாட்களில் தனது வீட்டுப் பாடங்களை நண்பர்களுடன் இணைந்து செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் கற்ற பல்கலைக்கழகத்தில், அதே காலப்பகுதியில் கற்ற யொஷாந்த என்பவர், பல்கலைக்கழகத்திலேயே மிகவும் புத்திசாலித்தனமானவர்

அவர் ஒரு இலங்கையர். எப்படி அவர் ஒரு பகுதி வேறுபாடு சமன்பாட்டை மிக குறுகிய நேரத்தில் தீர்ப்பார் என்பதே எனக்கு கேள்வியாக இருந்தது.

நாங்கள் யொஷாந்தவிடம் கணித சமன்பாட்டைக் காட்டினோம், அவர் அதனை அவதானித்து கொண்டே இருந்தார். உடனடியாக பதில் COSINE என அவர் கூறினார். எனினும் அதனை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அது எப்படி சாத்தியம் என அவரிடம் வினவினேன். அவர் தனது அறைக்கு அழைத்து சென்றார். 3 பக்கங்களில் அந்த கணக்கின் சமன்பாடுகளை எழுதினார். சமன்பாட்டின் இறுதியில் விடை COSINE என வந்தது.

அதனை தொடர்ந்து 3 வருடங்களுக்கு பின்னர் அதேபோன்ற ஒரு கணக்கினை கண்டேன். அதன் இறுதி விடையும் COSINE என்பதனை அன்றே கண்டுபிடித்தேன்.

அதன் போதே நான் பெரிய கணித மேதாவி இல்லை என்பதனை புரிந்து கொண்டேன். எனினும் அவதானிப்பு என்பது இந்த இடத்தில் முக்கியமான ஒன்றாக இருந்தது.

சில சந்தர்ப்பங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றுவதாக அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி Jeff Bezos மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 34 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. அதனை அமேசான் தலைமை அதிகாரி தற்போது தெரிவித்துள்ளார். இந்த பதிவில் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த யொஷாந்த இத்தனை வருடங்களின் பின்னரும் சம்பவத்தை நினைவில் வைத்திருப்பது குறித்து ஆச்சரியமடைந்துள்ளார். அதற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை உதவியை இலங்கையர் செய்திருக்கவில்லை என்றால் இன்று அமேசன் என்ற ஒரு நிறுவனம் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என இன்னும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் கோடீஸ்வரர்களின் தரப்படுத்தலில் Jeff Bezos முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்தின் பெறுமதி 112 பில்லியன் டொலர்கள் ஆகும்.

1 comment:

  1. சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு

    ReplyDelete

Powered by Blogger.