முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லை, நிர்ணய அறிக்கைக்கு எதிராக மகிந்த டீம் - ஆதவாக JVP
மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நாளை இடம்பெறவுள்ள விவாதற்தின் போது அதற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரக்கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , இந்த அறிக்கைக்கு தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Post a Comment