Header Ads



பள்­ளி­வா­சல்­களில் புதி­தாக ஜும்ஆ, தொழுகை ஆரம்­பிக்­கப்­ப­டு­வதற்கு எதிர்ப்பு

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் பள்­ளி­வா­சல்­களில் புதி­தாக ஜும்ஆ தொழுகை ஆரம்­பிக்­கப்­ப­டு­வதை அப்­ப­கு­தி­யி­லுள்ள பெரிய பள்­ளி­வா­சல்கள் எதிர்க்­கின்­றன. இது தொடர்­பான முறைப்­பா­டுகள் வக்பு சபைக்கு கிடைத்­துள்­ளன. இம்­மு­றைப்­பா­டுகள் விசா­ரிக்­கப்­பட்டு உரிய தீர்­வுகள் வழங்­கப்­படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்தார். வக்பு சபைக்கு கிடைக்­கப்­பெற்று வரும் முறைப்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

 “அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் புதிதான பிரச்சினைகள் எழுந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் பள்­ளி­வா­சல்­களில் புதி­தாக ஜும்ஆ தொழுகை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றை தடை செய்­யு­மாறும் அந்­தந்தப் பகு­தி­க­ளி­லுள்ள பெரிய பள்­ளி­வா­சல்கள் முறைப்­பாடு செய்­துள்­ளன. பள்­ளி­வா­சல்கள் சமூக நலன்­க­ரு­தியே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­ற­ன­வே­யன்றி சமூ­கத்­துக்குள் பிள­வு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்­கா­க­வல்ல. பள்­ளி­வா­சல்கள் சமூக ஒற்­றுமை, நல்­லு­றவு மற்றும் அபி­வி­ருத்­தியை நோக்­க­மாகக் கொண்டே இயங்க வேண்டும்.

கிரா­மங்கள் நக­ர­ம­ய­மாக்கல் கார­ண­மா­கவே பள்­ளி­வா­சல்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் எழு­கின்­றன. நக­ர­ம­ய­மாக்கல் கார­ண­மாக பல இயக்­கங்கள், பல கட்­சி­களைச் சேர்ந்­த­வர்கள் குடி­யே­று­கின்­றனர். அவர்­க­ளுக்­கி­டையில் இயக்க ரீதி­யி­லான பள்­ளி­வா­சல்கள் உரு­வா­கின்­றன. சமூகம் வேறு­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­றது. சமூ­கத்தைப் பிள­வு­ப­டுத்தும், சீர்­கு­லைக்கும் முயற்­சியில் ஈடு­ப­டக்­கூ­டாது. பள்­ளி­வா­சல்­களை இதற்­காகப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது.

ஜும்ஆ தொழுகை ஆரம்­பிக்­கப்­ப­டு­வது தொடர்பில் கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டுகள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­படும். அத்­தோடு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு விஜயம் செய்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பார்கள். பள்­ளி­வா­சல்­க­ளுக்­கி­டையில் இயக்க ரீதி­யிலோ அல்­லது கட்சி ரீதி­யிலோ பிள­வுகள் ஏற்­ப­டு­வது மிகவும் ஆபத்தானதாகும். எனவே பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் பிளவுபட்டு முரண்பட்டுக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வக்பு சபை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரித்து உரிய தீர்வுகள் வழங்கும்” என்றார்.

3 comments:

  1. So how come Thableeq Jamath has upper hand in each and every Masjids in the country? They would not allow any other group to work in t same masjids.

    ReplyDelete
  2. முதலில் பெரிய பள்ளிவாசல்களை ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் தப்லீக் முட்டாள்களை அகற்ற வேண்டும்.

    ReplyDelete
  3. IF the central or Big masjid in these areas... implements Quran and Sunnah as it was practiced by Muhammed (sal) and His companions... no muslim will depart them or make a separate masjid the worship Allah alone purely.

    Also... When Big masjids blindly open their doors to TABLEEG group.. It is inevitable for other groups forming their separate places.

    In my opinion.. Central Masjid should not favor any groups TABLEEG, TAWHEED or JAMATH ISLAMI or any other SOOFEE sects. Rather they should be sticking to QURAN and SUNNAH and the Practices of Muahmmed (sal) and His companions way.

    If they not only agree but READY To create a practicable maechanism to proceed with TRUE form of Islam without favoring any group... I am sure All the groups will unit under the Big/ Central Masjids in these area.

    It is upon relevant authority to consider all the facts in solving this problem.

    NOTE: The prime purpose of establishing a Masjid is not Unity But to worship Allah purely and to follow the Sunnah of Muahammed (sal)..through which the REAL UNITY will come.


    May Allah Guide us upon his Quran and Sunnah of Muhammed (sal) and Protect all Muslims from this Groups in the name of Islam but which splits Muslim.

    ReplyDelete

Powered by Blogger.