மாகாண எல்லை நிர்ணய, அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்
பாராளுமன்றத்தில் நாளை (24) சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த அறிக்கைக்கு ஒரு போதும் தமது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லை என்று அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது கட்சியின் நிலைப்பாட்டை மீள் உறுதிப்படுத்தினார். குறிப்பிட்ட கூட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான கட்சி ஆகியன எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பில் தமது எதிர் நிலைப்பாட்டை பிரதமர் ரணிலிடம் தெரிவித்த போது, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்து எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்தே வாக்களிக்குமென்ற உறுதிமொழி பெறப்பட்டது.
ஜனநாயக அரசில் எந்தக் கட்சி எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் சிறுபான்மையினரைப் பாதிக்கும் இந்த அறிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பதென உறுதியாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு, அதற்கு எதிராக எப்படி வாக்களிக்க முடியும்?
ReplyDeleteYou all supported this resolution and agreed in the cabinet ministers meeting. Why you all opposing it now. Mahinda Samarasinghe says, there is a way to implement the system even though it is defeated in the parliament. Will you all resign then?
ReplyDelete