Header Ads



கொடிய புலிகளுக்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்த சுவாமி - மரணவீட்டில் மகிந்தவின் புகழாரம்


பா.ஜ.கா.வின் சிரேஸ்ட தலைவர்களில்  ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின்  பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் இறுதியைகிரியைகளில் கலந்துகொள்வதற்காக  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவின் சகோதரரின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாத்தறையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் மெதமுலன இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில்  கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச,

சுப்பிரமணியன் சுவாமியை நான் வரவேற்றேன், புதுடில்லியில்  இடம்பெறவுள்ள நிகழ்வில் உரையாற்றுமாறு அவர் விடுத்த அழைப்பை நான் பெரும் கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் நீண்ட கால நண்பர் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் விடுதலைப்புலிகளின் கொடிய பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிறந்த நலன்களைப் எப்போதும் தனது இதயத்தில் வைத்திருப்பவர் சுவாமி எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


5 comments:

  1. இவர் தான் அயோத்தியில் பாபர் மசூதி கட்டவிடாமல் தடுத்த நபர். இந்திய முஸ்லிம்களின் உரிமையை கருவருத்தவரில் மிக பிரதான நபர். குஜராத்தில் மோடி செய்த முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்களை நீதிமன்றத்திலேயே பூசி மெழுகி மோடியை பிரதமராக்க படாத பாடும் பன்னெண்டும் பட்டவர். இவரின் இதுபோன்ற கருத்தை இங்கே பதிவு செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    ReplyDelete
  2. Swamy IS IN Sri Lanka. Not a good sign. He is the culprit in Rajiv case along with Chandra Swamy. He was in fore front in demolishing babar masjid. He has no steady policy. Never won an election except winning in Madurai long time before. Staunch hindu at a. Daughter is married to a Muslim. Joining hands with Rajapakse is no good sign. Coming for Chandra Rajapakse is not that of an important matter. He is here on a dirty mission. Be vigilant

    ReplyDelete
  3. வில்லும் அம்பும் ஒன்றாய் இங்கு!

    ReplyDelete
  4. @Nazrey
    You are 100%right

    ReplyDelete
  5. இந்தியா முழுவதும் காலப்போக்கில் சமஸ்கிரிதம் மட்டும் ஆட்சி மொழியாக கொண்டுவந்து முழு நாட்டையும் இந்து நாடாக மாற்றத்துடிக்கும் சுப்பிரசுவாமியை சாதனையாளராக காட்ட முற்படும் Jaffna Muslim இனையத்தலத்திற்கு வாழ்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.