விக்னேஸ்வரனின் கோரிக்கையை, முதுகெலும்பில்லாத அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது
வட மாகாணத்தில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டுமென அம்மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை, முதுகெலும்பில்லாத அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஒன்றிணைந்த எதிரணி முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் என்பது, நாட்டின் அனைத்து மக்களும் அமைதியாய் வாழ்வதற்கு வழி செய்த இராணுவ வீரர்களை நினைவுக்கூருவதற்கான நினைவுச் சின்னங்கள் என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளையில் அமைந்தள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமவீர ஆகியோர், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரபணுவில் வந்த பேய்கள் எனவும் அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர கடுமையாக விமர்சித்தார்.
தெற்கிலே ஜேவிபி விஜயவீரவை கொன்ற பின் அங்கு ஏன் ஒரு நினைவு சின்னங்களும் அமைக்கப்படவில்லை. வடக்கில் மட்டும் ஏதட்கு போர் நினைவு சின்னங்கள். அவற்றை பார்க்கும் போது கற்பழிக்கப்படட சகோதரி இசைப்பிரியாவும் ரீட்டாவும் கிரிஷாந்தியும் தான் நினைவுக்கு வரும். இது மேலும் இன விரிசலை உண்டு பண்ணும். மீறி உங்களுக்கு நினைவு சின்னங்கள் வேண்டுமானால் பல சிங்கள இடங்களை வெற்றி கொண்ட தமிழ் மன்னர்களின் தூபிகளை தென்னிலங்கையில் நிறுவி சிங்கள மக்களுக்கு பொதியுங்கள் தமிழனின் வீரம் என்னவென்று.
ReplyDelete