முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களை, கள்ளத்தனமாக பிடிக்க சதி
கல்முனை முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களை கள்ளத்தனமாக உப செயலகத்துக்குரியதாக்கி அதனை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மூலம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க முயற்சித்தமை பாரிய இனமுரண்பாடுகளுக்கான செயல் என்பதுடன் கல்முனை முஸ்லிம்கள் அதிகமானோர் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தும் கடந்த 18 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரை கல்முனைக்கு ஹக்கீம் பிரேரிக்காததன் விளைவுகளே இவையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது,
அடிக்கடி கல்முனையில் வாழும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இனவாதத்தை உருவாக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் எப்போதும் முயற்சி செய்து வருகின்றனர்.
நாடு முழுக்க இனவாதம் ஒழிக்கப்பட்டாலும் கல்முனையில் இனவாதத்தை கையிலெடுக்கும் முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பது தமிழ், முஸ்லிம்கள் உறவை சிதைக்க எடுக்கப்படும் முயற்சியாகும்.
கல்முனை பிரதேச செயலகம் என்பது நூறு வீதம் தமிழ் மொழியிலான செயலகமாகும். இதனை முஸ்லிம்களுக்கு வேறு தமிழ் மக்களுக்கு வேறு என பிரிப்பது நாட்டின் பல பிரதேச செயலகங்கள் இனரீதியிலான பிரிப்புக்கு முகம் கொடுக்க வேண்டி வருவதுடன் இனமுறுகல்களையும் ஏற்படுத்தும்.
கல்முனை பிரதேச செயலகத்துக்கு உப பிரதேச செயலகம் தமிழ் மக்களுக்கென தனியாக இயங்குகின்றது. அப்படியாயின் கிழக்கு வடக்கு மாகாண சபைகளிலும் முஸ்லிம்களுக்கென தனியான உப மாகாண சபைகளை ஏற்படுத்த அரசு அனுமதிக்குமா என கேட்கிறோம்.
கல்முனை என்பது முஸ்லிம்களின் தலை நகர் என சொல்லப்பட்டும் கடந்த 18 வருடமாக அமைச்சரவை அமைச்சு இல்லாத அனாதை தலைநகராக உள்ளது. இனவாத தமிழ் கூட்டமைப்பினர் கள்ளத்தனமாக கல்முனையை சுருட்டிக்கொள்ள அமைச்சரவை பத்திரம் வழங்கியதைக்கூட அறியாத அல்லது அறிய விரும்பாதவராக ரவூப் ஹக்கீம் இருந்துள்ளார். இத்தகைய மோசமான தலைவரின் கட்சிக்கு கல்முனை முஸ்லிம்கள் வாக்களித்து விட்டு இன்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே கல்முனை உபசெயலகத்தை அரசு உடனடியாக ரத்து செய்து விட்டு கல்முனை மாநகர சபை இருக்கத்தக்க ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் 1987ம் ஆண்டு இருந்தது போல் அதே எல்லைகளுடன் இருக்கத்தக்க வகையில் புதிய சபைகளை உருவாக்க வேண்டும் என உலமா கட்சி அரசை கேட்டுக்கொள்கிறது.
உப்பு மா கட்சி தலைவர் ஒரு இனவாதி
ReplyDeleteஇனவாரியான பிரதேச செயலகங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் இருக்கு. இனரீதியான பிரதேச சபை வேண்டாம் என்றால் அல்லது மொழிவாரியான பிரதேச சபை போதும் எனத் தீர்மானம் எடுத்தால் அதை அரசு வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல இலங்கை அடக்கிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்தாது என்பதற்க்கு உத்தரவாதமில்லை. கோரளைபற்று மத்தி போன்ற பல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் மேற்படி தீர்மானம் பாதிக்கும். ஒரு மொழி பேசினாலும் இன்ரீதியாக வடகிழக்கை இணைக விடமாட்டோம் என்கிறவர்களே அந்த நிலைபாட்டுக்கு எதிராக கல்முனையை பிரிக்க விடமாட்டோம் என்பது முரண்பாடாக உள்ளது. முஸ்லிம்களின் தலைவிதியை தமிழன் தீர்மானிக்க முடிது அதேபோல தமிழனின் தலைவிதியை முஸ்லிம்களும் தீர்மானிக்க முடியாது. இங்கு நிலம்தான் சிக்கல் என்றால் கல்முனை முஸ்லிம் பிரிவுக்கு சொந்தமான பாரம்பரிய அரச நிலங்கள் பற்றி பேசுங்கள். இனவாதம் அது தமிழர் நிலைபாடாக இருந்தாலும் முஸ்லிம்கள் நிலைபாடாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ReplyDeleteஇன ரீதியிலான பிரதேச செயலகங்கள் கிழக்கில் உள்ளதாக ஜெயபாலன் கூறியுள்ளார். அவ்வாறு இன ரீதியாக பெயர் கொண்ட பிரதேச செயலகங்கள் கிழக்கில் எங்கே உள்ளன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
ReplyDeleteகோறலை பற்று பிரதேச சபை முஸ்லிம் என்ற பெயரில் இல்லைம் கோறலை பற்று என்ற சொல்லே தமிழ் சொல்லாகும். இங்கு மொழிரீதியிலான சபை உள்ளதே தவிர இனரீதியில் அல்ல.
ஆனால் கல்முனை பிரதேச செயலகம் தமிழ் மொழி மூலம் இருக்கையில் இன்னுமொரு செயலகம் தமிழ் என்ற இனத்தின் பெயரில் இருப்பது சட்டத்துக்கு முரணானதாகும் என்பதுடன் இது இனவாதமுமாகும்.
- முபாற்க் அப்துல் மஜீத்
உலமா கட்சி
This comment has been removed by the author.
ReplyDeleteமொழி ரீதியில் பிரதேச சபைகள் இருக்கலாம், இந ரீதியில் பிரதேச சபைகள் இருப்பது ஆபத்தானது.
ReplyDeleteவிவாதங்களுக்குள் நுழைவது என் நோக்கமல்ல. எதிர்காலத்தை வெற்றிகரமாகக் கையாளுவது தொடர்பாக எனது ஆலோசனைகள் முஸ்லிம்களுக்கு உதவினால் மகிழ்வேன். தமிழர் முஸ்லிம்களையும் முஸ்லிம்கள் தமிழர்களையும் சிங்கள இன்னவாதிகளின் பக்கம் தள்ளிவிடுகிற ஆபத்து தீவிரப்படுவது கவலை தருகிறது.
ReplyDelete