வீதி விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்து,ம் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை
வீதி விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை கொண்டு வர பங்காளாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்காளாதேஷில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களால் பலர் பலியாகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டாக்காவில் அண்மையில் மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் பாரிய போராட்டமாக மாறியதில் பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டன.
உயிரிழப்புக்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.
தொடர்ந்தும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருவதனால், காவற்துறையினருக்கும் மாணவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர பங்களாதேஷ் அரசாங்கம், வீதி விபத்தில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment