இரசாயனம் மூலம் பழங்களை, பழுக்கச்செய்தால் கைது செய்யப்படுவீர்கள்
பல்வேறு இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்தி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், பழங்களைப் பழுக்கச் செய்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல்வேறு இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்கச்செய்யும் நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment